TN Weather: சட்டென மாறிய வானிலை - சென்னையில் பரவலாக மழை, 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
TN Weather: தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.

TN Weather: சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வானிலை மையம் எச்சரிக்கை:
சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் காலை 7 மணி வரையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 18, 2025
சென்னையில் மழை:
சென்னையில் நேற்று மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. அதிகாலை முதல் லேசானது தொடங்கி மிதமானது வரையிலான மழை நகரின் பல்வேறு இடங்களில் பதிவாகி உள்ளது. வடபழனி, கோடம்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இந்த மழை பதிவானது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களை நெருங்கும் கருமேகங்களால் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் பகல் நேரங்களில் வாட்டி வதைத்து வரும் கோடை வெயிலுக்கு இதமான தீர்வாக குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அதேநேரம், அதிகாலையில் வேலைக்கு செல்வோர் இந்த லேசான மழையால் சிரமத்திற்கு ஆளாகினர்.
10 மணி வரை மழை:
அதிகாலையில் வெளியான மற்றொரு அறிக்கையில்,
- சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், காலை 10 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்
- நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய 10 மணி வரையில் லேசான மழை பெய்யக்கூடும்
- புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தில் காலை 10 மணி வரையில் லேசான மழை பெய்யக்கூடும்” என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.





















