மேலும் அறிய
Advertisement
தொடங்கியது சிறுமி டான்யாவிற்கு 8 மணி நேர முகச்சிதைவு அறுவை சிகிச்சை
10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் முகச்சிதைவு அறுவை சிகிச்சை 8 மணி நேரம் நடைபெற உள்ளது
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் டானியா. ஒன்பது வயதாகிறது. டானியா வீராபுரம் அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.
சிறுமி டான்யா மிக அரிய வகை முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பக்க கண்ணம் முழுவதும் சிதைந்த நிலையில் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் அவதி அடைவது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இதனை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு மூலம் செய்து தரப்படும் என கூறியிருந்தார். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் தினமும் அந்த சிறுமி டனியாவை தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தினமும் மருத்துவமனைக்கு வந்து அவரின் நலம் விசாரித்து வருகிறார். அது மட்டும் இன்றி இன்று சிறுமி டானியாவிற்க்கு 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் அறுவை சிகிச்சை 8 மணிக்கு துவங்கியது. பேரிரொம்போக் என்னும் இந்த நோய் உலகத்திலேயே இரண்டரை லட்சம் பேரில், ஒருவருக்கு தான் சிறிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதுவும் வயதில் பெரியவர்களுக்கு தான் பாதிப்பு வரும் எனவும், ஆனால் சிறுமி டான்யா முகச்சிதைவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 8மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டானியாவின் பெற்றோர் கூறியது: எனது மகளின் அரிய வகை நோய்க்கு இதுவரை ரூ.10 லட்சத்துக்கு மேல் செலவானது. தற்போது முக அறுவை சிகிச்சை செய்வதற்கு பணமில்லை. எனது மகளின் அறுவை சிகிச்சைக்கு முதல்வர் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இது முதல்வரின் கவனத்துக்குச் சென்றது. கடந்த வாரம் புதன்கிழமை திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் இளங்கோவன், துணை இயக்குநர் ஜவகர் தலைமையில் மருத்துவக் குழுவினர் எங்கள் வீட்டுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியது: மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர் சிகிச்சை அளிக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றார். இதையடுத்து, சிறுமி டானியாவை பூந்தமல்லி அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்நத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அனைத்துக் கட்ட பரிசோதனைகளும் முடிந்து இன்று காலை சிறுமிக்கு அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion