VCK - ADMK: அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த திருமாவளவன் - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
திமுகவிற்கும் , அதிமுகவிற்கு இடதுசாரி கட்சிக்கும், விசிகவிற்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு என்றாலும் ஆட்சியில் உள்ள அரசுக்கு மதுவிலக்கை அமல்படுத்துவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை.
![VCK - ADMK: அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த திருமாவளவன் - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு Thirumavalavan called AIADMK anti-liquor convention protest - TNN VCK - ADMK: அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த திருமாவளவன் - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/10/c7fe0cf876bcb7c18ae43cf30a5c654a1725952882015113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:
அக்டோபர் 2ம் தேதி விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 69 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தபோது, மக்கள் வைத்த கோரிக்கை மதுபான கடைகளை அரசு மூட வேண்டும், சாராய கடைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆகவே தான் மதுவிலக்கு கோரி மாநாட்டை விசிக நடத்துகிறது.
மேலும் திமுகவிற்கும் , அதிமுகவிற்கு இடதுசாரி கட்சிக்கும், விசிகவிற்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு என்றாலும் ஆட்சியில் உள்ள அரசுக்கு மதுவிலக்கை அமல்படுத்துவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை. ராணுவத்தில் இருந்தால் மது அருந்தலாம், கேண்டீனில் மது வாங்கலாம் என்று இருக்கும் நிலை மாற வேண்டும்.
மதுவிலக்கை தேசிய கொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்த முன் வரும் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பை ஈடு செய்ய சிறப்பு நிதி வழங்க வேண்டும். மனித வளத்தை பாதிக்க கூடிய மது விற்பனையை அரசே செய்வது தேசத்திற்கு விரோதமான செயல் என்றார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், தேர்தல் அறிக்கையில் கூறிய மதுவிலக்கு கொள்கை திட்டத்தை திமுக அரசு உயிர்பிக்க வேண்டும். மதுவை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மதுவுக்கு மாற்றாக கள்ளு கடை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வலுக்கிறதே என்ற கேள்விக்கு கள்ளு கடை உள்ளிட்ட எந்த போதை பொருளும் கூடாது என்பது தான் விசிக நிலைப்பாடு.
விசிக-வின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம் எல்லாம் கட்சிகளும் வரலாம். இந்த நிலைப்பாடை தேர்தல் அரசியலோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது எனவும் மாநாடு நடத்தும் விஜய்-க்கு வாழ்த்துகள் எனவும் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)