கடலூரில் நண்பர்களுக்கு தன்னை விற்க முயன்றதாக கணவன் மீது மனைவி புகார்
’’பின்னொருநாள் இரவில் உறங்கும் பொழுது அவருக்கு தெரியாமல் மனைவியை உடம்பில் துணியில்லாமல் வீடியோ எடுத்துள்ளார்’’

ஐஸ்வர்யா (27) எனும் பெண் தாய் தந்தை இல்லாத காரணத்தினால் காப்பகத்தில் படித்துவிட்டு தற்பொழுது சிங்கப்பூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான நடன பயிற்சியாளராக வேலை பார்த்து வந்துள்ளார், அதே ஊரில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் (27) என்பவரும் ஆட்டோமொபைல் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்,பின் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது சிறிது நாட்களுக்கு பிறகு அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.

இதற்குப் பின் ஐஸ்வர்யாவிடம் நாம் இருவரும் தமிழ் நாட்டிற்கு சென்று எனது பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி அவரை தமிழ்நாட்டில் உள்ள தனது சொந்த ஊரான கடலூர் மாவட்டத்திலுள்ள முடசல் ஓடை இந்த கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார் பின் பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவருக்கும் அருகே உள்ள கோயிலில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில நாட்களுக்கு பின் வீட்டில் உள்ளவர்க்கும் ஐஸ்வர்யாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அருண் தனது மனைவியான ஐஸ்வர்யாவை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்று அங்கு வாடகைக்கு வீடு எடுத்து மனைவியை தங்க வைத்துவிட்டு மீண்டும் வேலைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார். இதற்கிடையில் அருணின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஐஸ்வர்யாவை தொலைபேசியில் அழைத்து தனது மகனை மயக்கி கொண்டு சென்று விட்டாய், அவனை கொன்றாலும் கொன்றுவிடுவாய் என கூறி ஒரு கணவர் வரும்வரை மனதளவில் அவரை மிகவும் துன்புறுத்தியுள்ளனர் பின், சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்த கணவர் மனைவி ஐஸ்வர்யாவை வீட்டில் விட்டுவிட்டு ஊருக்கு சென்று தன் குடும்பத்தினரை பார்த்து விட்டு வந்துள்ளார் அதன்பின் அவருக்கு புதிதாக நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

பின் அவரது மனைவியிடம் நான் பெண்களை வைத்து தொழில் செய்து வருகிறேன் நீயும் என்னுடன் சேர்ந்து தொழில் செய்கிறாயா என்று கேட்டுள்ளார் அதற்கு அவரின் மனைவி நான் அப்படிபட்ட பெண் இல்லை என்னை இதில் சேர்க்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார், இவ்வாறு கூறிய பிறகு அருண் மனைவி ஐஸ்வர்யாவை தனது நண்பர்களுக்கே விற்க முயன்றுள்ளார் இதனை அறிந்து கொண்ட ஐஸ்வர்யா அவரிடமிருந்து தப்பித்து கடலூரில் உள்ள கணவனின் வீட்டுக்கு வந்துள்ளார் ஆனால் இங்கும் கணவனின் தாய் மற்றும் தந்தை ஐஸ்வர்யாவை கழுத்தை நெறித்தும், அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றியும் கொல்ல முயற்சி செய்துள்ளனர்.

இதற்குப் பின் ஐஸ்வர்யா மீண்டும் சிங்கப்பூருக்கு சென்று உள்ளார், சிங்கப்பூருக்கு சென்ற அவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது கணவர் நன்றாக இவருடன் பழகி உள்ளார் பின்னொருநாள் இரவில் உறங்கும் பொழுது அவருக்கு தெரியாமல் மனைவியை உடம்பில் துணியில்லாமல் வீடியோ எடுத்துள்ளார். பின் அதனை கூறி மிரட்டி அவரிடம் இருந்த சுமார் 30,0000 ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணத்தினை எடுத்துக்கொண்டுள்ளார் ,இதேபோல் பல பெண்களையும் அவர் மிரட்டி வந்துள்ளார், இதனால் பயந்து போன ஐஸ்வர்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தன் கணவன் அருண் மீது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தன்னைப் போல் அவரிடம் சிக்கியுள்ள பல பெண்களையும் காப்பாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

