மேலும் அறிய

மெட்ரோ ரயில் திட்டம் - பா.ஜ.க அரசின் அப்பட்டமான பாரபட்ச செயல் - செல்வப்பெருந்தகை

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி அளிக்கவில்லை என பாஜக அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி அளிக்கவில்லை என பாஜக அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாடு எப்படி வஞ்சிக்கப்பட்டதோ, அதே வகையில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்குவதில் சமநிலைத் தன்மையோடு அணுக வேண்டிய ஒன்றிய அரசு அப்பட்டமான பாரபட்சத்தை கடைபிடித்து மெட்ரோ ரயில் திட்டத்திற்கான மொத்த நிதியில் 80 சதவிகித நிதி மராட்டியம், குஜராத் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் மெட்ரோ ரயில் சேவைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஒன்றிய அரசுக்கு இருக்கிறது.

கடந்த 2022-23, 2023-24 நிதியாண்டில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. மொத்த 118.9 கி.மீ. தூரமுள்ள இத்திட்டத்திற்கான மதிப்பீடு ரூபாய் 63,246 கோடி. இதில் பெரும்பாலான நிதிச்சுமையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. 

ஜூலை 2024 இல் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இந்தியா முழுமைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூபாய் 21 ஆயிரத்து 247 கோடியே 94 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது 9 சதவிகிதம் அதிகமாகும். இந்த ஒதுக்கீட்டின்படி மராட்டிய மாநிலத்திற்கு மொத்த நிதி ஒதுக்கீட்டில் 36 சதவிகிதமும், குஜராத் மாநிலத்திற்கு 15.5 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நான்கு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 80 சதவிகிதம் ஒதுக்கியிருப்பது அப்பட்டமான பாரபட்சமாகும். இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு நிதி எதுவும் ஒதுக்கப்படாதது மிகுந்த கண்டனத்திற்குரியது.

ஒரு ரூபாய் கூட சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி அளிக்கவில்லை என்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் அப்பட்டமான பாரபட்ச செயலாகும்.

சென்னை மாநகரம் மற்றும் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நெரிசலை தவிர்ப்பதற்கு ஒரே வழிமுறை மெட்ரோ ரயில் திட்டமாகும்.

இந்த அடிப்படையில் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூபாய் 14,000 கோடி ஒதுக்கப்பட்டு முதல் கட்டமாக மெட்ரோ ரயில் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

அது இன்றைக்கு பயணிகளுக்கு பெருமளவில் உதவி வருகிறது. மேலும் பல திட்டங்களுக்கு ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிதி ஒதுக்கவில்லை என்றாலும் மாநில அரசு மெட்ரோ ரயில் திட்டங்களை பல வழித்தடங்களில் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பதை வரவேற்கிறேன்.

ஒன்றிய அரசு புறக்கணித்தாலும் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் தற்போது மெட்ரோ ரயில் திட்டங்கள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. ஆனால், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிற தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்குகிற நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலைக்குரியதாகும்.

எனவே, தமிழக மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதங்களுக்கு ஒன்றிய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இத்தகைய பாரபட்ச போக்கை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பின்பற்றுமேயானால் தமிழக மக்களின் கடும் கொந்தளிப்புக்கும், எதிர்ப்புக்கும் ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
Embed widget