மேலும் அறிய

கட்சிக்கொடி பாடலை வெளியிடும் விஜய்.. பாடலை எழுதியவர் யார்? இசையமைப்பாளர் யார்? 

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி கொடியினை அறிமுகப்படுத்தி கட்சி பாடலை வெளியிடுகிறார்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சிக் கொடியை இன்று அறிமுகப்படுத்தி, கட்சி பாடலை வெளியிடுகிறார்.

விஜயின் அரசியல் ஆசை 

நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் என்பது இருந்து வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை என்பது இருந்து வருகிறது. இதனால் வளர்ந்து வரும் நடிகராக இருந்த பொழுதே நடிகர் விஜய், பல்வேறு வகையில் மறைமுகமாக அதற்கென்று கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கினார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை, தொகுதிவாரியாக பலப்படுத்தும் பணி நடைபெற்றது. 

தொடர் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு 

இதன் ஒரு பகுதியாக மாவட்டம் வாரியாக தொடர்ந்து நடிகர் விஜய் ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி வந்தார். இதன் மூலம் தனது ரசிகர் மன்றத்தை முறையாக கட்டமைத்தார். இதனைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை போட்டியிட வைத்தார். நகர்புற தேர்தலில் அவரது ரசிகர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி கிடைத்திருந்தது. 

மாணவர்கள் சந்திப்பு 

கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் தொகுதிவாரியாக சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற, மாணவ மாணவிகளை சந்தித்து பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறார். அவப்பொழுது மாணவர் சந்திப்பு கூட்டத்தில் அவர் நேரடியாகவே அரசியல் சார்ந்த கருத்துக்களை முன்வைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அரசியல் கட்சி தொடக்கம் 

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதற்காக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, கட்சி உறுப்பினர் சேர்க்கை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் கட்சி நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர்.

கட்சிக்கொடி அறிமுகம் 

இந்தநிலையில் நடிகர் விஜய் இன்று அவரது பனையூர் அலுவலகத்தில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்த உள்ளார். ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை மஞ்சள் நிற கொடியில் அவரது உருவம், பதித்த கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்தார். இன்று அவர் ஏற்ற உள்ள கொடியில், மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு நிறங்கள் இடம் பெறும் எனவும், நடுவில் விஜய் புகைப்படம் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. 

கட்சிப் பாடலில்..

நடிகர் விஜயின் கட்சி பாடல் இன்று வெளியிடப்படுகிறது. கட்சி பாடலுக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போக கட்சிப் பாடலுக்கு பாடல் ஆசிரியராக விவேக் பாடலை எழுதிக் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநாட்டின் பொழுது கொடி மற்றும் பாடலை வெளியிட விஜய் முடிவு செய்து இருந்த நிலையில், மாநாட்டுக்கு முன்பு கொடி இருந்தால் மாநாட்டிற்கு வரும் பொழுது வாகனங்களில் கொடியை கட்டிக் கொள்வதற்கும், மாநாட்டிற்கு பொதுமக்களை அழைப்பதற்கு கட்சி பாடல் பிரச்சாரமாக அமையும் என விஜய் முடிவு செய்து இந்த திடீர் முடிவை எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி கழகக் கொடியை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும், வெற்றி நிச்சயம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Embed widget