மேலும் அறிய
Advertisement
பட்டம் பறக்குது பட்டம்! டிசைன் டிசைனாக பட்டங்கள்! தமிழகத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா!
செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து சர்வதேச பட்டம் விடும் திருவிழா இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியார் போட்டியானது , சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் வெகு விமர்சியாக நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து மகாபலிபுரத்தில் மற்றொரு சர்வதேச போட்டியானது நடைபெற உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் ''சர்வதேச பட்டம் விடும் திருவிழா'' சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் இன்று முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்டப் பல்வேறு நாடுகளை சார்ந்த குழுக்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
இந்த திருவிழாவில் பலூன் வடிவில் இருக்கும் பல்வேறு விலங்குகள், மீன்கள் மற்றும் பறவைகள் வடிவிலான பட்டங்கள் பறக்கவிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்பனை நடைபெற்று வருகிறது. சுற்றுலாத் துறைக்குச்சொந்தமான கடற்கரையை ஒட்டிய 14 ஏக்கர் பரப்பளவில், இந்த ''பிரமாண்ட பட்டம் விடும் திருவிழா'' நடத்தப்பட உள்ளது. இதில் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம். பெரியவர்களுக்கு 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
''சர்வதேச பட்டம் விடும் திருவிழா'' நடைபெற உள்ள இடத்தில் பல்வேறு விதமான இசைக்கச்சேரிகள், உணவுத் திருவிழா போன்றவையும் நடைபெற உள்ளதால், இது பொதுமக்களுக்கு மிகுந்த பொழுதுபோக்கு அம்சமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படக்கூடிய இந்த திருவிழா இந்தியாவில் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த ஆண்டு சுற்றுலாத்துறை சார்பில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
துவக்கி வைத்த அமைச்சர்கள்
பட்டங்கள்(காத்தாடி) விடும் விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 3 நாட்கள் நடைபெறும் பட்டம் விடும் விழா தினமும் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தற்போது இவ்விழாவிற்காக மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் உள்ள 15 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் பிரம்மாண்டமான மேடை அமைத்து விழா நடைபெற்றது. விதவிதமான பட்டங்கள் வானில் பறந்து பார்வையாளர்களை கவர்ந்தது.மேலும் இந்த திருவிழாவில் பல்வேறு விலங்குகள், மீன்கள், பறவைகள் போன்றவை பலூன் வடிவில் பட்டங்களாக பறக்கவிடப்பட உள்ளன. இந்த திருவிழாவின்போது இசைக்கச்சேரிகள், உணவு திருவிழா போன்றவையும் நடைபெறும்
மாமல்லபுரத்தில் பட்டம் விடும் திருவிழா pic.twitter.com/ycfSipizEp
— Kishore Subha Ravi (@Kishoreamutha) August 13, 2022
.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
சேலம்
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion