Top News | சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகள்
நிரம்பிய ஏரிகள், சுகாதாரத்துறை துணை இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை உள்ளிட்ட முக்கிய செய்திகள்
1. காஞ்சிபுரம், சந்தவெளியம்மன் கோயில் அருகில், பொதுமக்களுக்கு தொந்தரவாக இருந்த டாஸ்மாக் கடை மாவட்ட ஆட்சியர் உத்தரவையடுத்து மூடப்பட்டது.
2. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்கு முன், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் 78 ஏரிகள் நிரம்பி உள்ளன.
3. காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பழனி வங்கி கணக்கில் இருந்த 29.80 லட்சம் ரூபாயை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைபற்றினர். லாக்கரில் இருக்கும் 160 சவரன் நகை குறித்து விசாரிக்கின்றனர்
4. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில், காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாக, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்
5. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு 2 போக்சோ வழக்குகளில் மட்டும் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
6. தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: 2021-22 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின்போது, சமூக நலன்-மகளிர் உரிமை அமைச்சர் 'தமிழ்நாடு அரசால் 6 புதிய மாவட்டங்களில் 'சமூக நல அலுவலகங்கள் புதிதாக ஏற்படுத்தப்படும்' என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
7. வங்க கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8. பண்டிகை நாட்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள், பொதுமக்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை பெருநகர மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
9. சென்னை சேத்துப்பட்டில் விசிக வட்டச்செயலாளர் நேற்றிரவு முன் விரோதம் காரணமாக வெட்டிக் கொலை
10 . திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தீபாவளிக்கு வெளியூர் போறீங்களா... எங்கிருந்து இயக்கப்படுகிறது சிறப்பு பேருந்துகள்... முழு விபரம்!#deepavalispecialbuses #tnstchttps://t.co/Ip0WiSNFtY
— ABP Nadu (@abpnadu) October 27, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.