மேலும் அறிய
Advertisement
Top News | சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் : கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகள் சில..
காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம், யூடியூபர் கைது,1.12 கோடி தங்கம் பறிமுதல் உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ
காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம் எச்சரிக்கையை தொடர்ந்து, காஞ்சிபுரம் செவிலிமேடு தரைபாலத்தில் வாகனங்கள், பொது மக்கள் செல்லாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திராவில் பலத்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் , முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மருத்துவர் ஷர்மிளா ஆகியோரை சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்த புகாரின் அடிப்படையில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதிமுக தொடங்கப்பட்டதன் 50-வது ஆண்டு பொன்விழாவை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கின்றனர்.
மெட்ரோ ரயில் பணியை முன்னிட்டு அயனாவரம் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் பெரியாா் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக யூ-டியூப் சேனல் நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.
சென்னை விமான நிலையத்தில், ரூ.1.12 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலில் தொடா்புடைய மூவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் உள்பட மேலும் 3 போர் கைது செய்யப்பட்டனா்.
ஆள் குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீலாங்கரை, 'அம்மா' உணவக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்
திருவள்ளூர் அருகே மருந்தகம் நடத்தி போலியாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே புதுவாயல் பகுதியில் லாரியில் கடத்தி வந்த 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே நீட் தேர்வு முடிவுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion