மேலும் அறிய
Advertisement
இது உங்க ஏரியா.! காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூரில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள்!
அனல் பறக்கும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரத் பந்த், கண்ணாடி பிரேமில் தங்கம் கடத்தல் உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ
1. ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். "இடுகாட்டை கூட விட்டுவைக்காத ஆட்சியாளர்கள்" என விமர்சனம்.
2. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரணிபுத்தூர், சுங்குவார்ச்சத்திரம், எடயார்பாக்கம்,வாலாஜாபாத், படப்பை, வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
3. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அ.தி.மு.க ஒன்றியக்குழு தலைவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அ.தி.மு.க உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. திருவள்ளூர் மாவட்டம் முழுதும் ஒரே நாளில், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 27 ரவுடிகளை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
5. சுத்தியல் மற்றும் கண்ணாடி பிரேமில் மறைத்து கடத்தி வரப்பட்ட, 66.34 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.58 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
6. 11 நாட்களில் சென்னையில், முக கவசம் அணியாமல் சுற்றிய, 21 ஆயிரத்து, 190 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்து, 42.38 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
7. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் பாரத் பந்த் சாலை மறியல் போராட்டத்தில் 48 பெண்கள் உட்பட 114 பேர் கைது.
8. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கைது. தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
9. மழையை எதிர்கொள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உட்பட தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
10 . செங்கல்பட்டு அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 15 டன் குட்கா பறிமுதல் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் தலைமறைவு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion