மேலும் அறிய

தமிழகத்தில் கடும் குளிர் ; முகவாதம் பாதிப்பு அபாயம் ! அறிகுறிகள், தடுக்கும் வழிகள் & எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், முகவாதம், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளின் விபரங்களை நோயாளிகளுக்கு தெரிவிக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கடும் குளிர் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், முகவாதம், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளின் விபரங்களை நோயாளிகளுக்கு தெரிவிக்கும் படி, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளை, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகம் முழுதும் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக, காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்றவற்றால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வகை பாதிப்பு, பிப்ரவரி மாதம் வரை இருக்கும் என்பதால், முதுமை, நீரிழிவு போன்ற இணை நோயாளிகளுக்கு, 'முகவாதம்' பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இது குறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது ;

தமிழகத்தில் டெங்கு, சிக்குன் குனியா போன்ற பாதிப்புகளை போல, கடும் குளிரில் முகவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. முகத்துக்கு உணர்வளிக்கும் நரம்பில் ஏற்படும் அழுத்தம், அழற்சி, வைரஸ் தொற்று போன்றவற்றால் ஏற்படும் பிரச்னை தான் முகவாதம்.

முகத்தில் உள்ள தசைகளுக்கு உணர்வூட்டும், முக நரம்புகளில் உள்காயம் ஏற்படுவது, வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது போன்றவற்றால் முகவாதம் ஏற்படும். இதனால், வாயை குவிக்க முடியாது, உதடு ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும். ஒரு பக்க கண்ணை முழுமையாக மூட முடியாது, வாய் வழியே எச்சில் வடிவதுடன், சரியாக பேச இயலாமல் குளறும்.

எனவே, குளிர்ந்த தரையில், பாய், தலையணை உள்ளிட்ட விரிப்பு கள் இல்லாமல் படுப்பதையோ, ஒரு பக்க கன்னத்தை, நேரடியாக குளிர்ந்த தரையில் வைத்து படுப்பதையோ தவிர்க்க வேண்டும். முகத்தை நேரடியாக தரையில் வைத்து படுப்பதன் வாயிலாக, முக நரம்பு அழுத்தப்பட்டு முகவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதே போல, கார், பஸ், ரயில்களில், அதிக நேரம் குளிர்ந்த காற்று, காது, கன்னம் பகுதியில் படும்படி பயணித்தாலும் முகவாதம் ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்டால், குணமாவதற்கு இரண்டு முதல் நான்கு மாதங்கள் எடுத்துக் கொள்ளும். எனவே, காது, கன்னம் பகுதியை பாதுகாப்பது அவசியம். இதற்கிடையே, அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு முக வாதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

முகவாதம் பாதிப்பு கண்டறியப்பட்டால் அதை தெரியப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது. எவ்வகை பாதிப்பாக இருந்தாலும், உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget