மேலும் அறிய
Advertisement
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை ..!
’’சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு’’
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு 11 மணி முதல் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது .
இருப்பினும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 133 ஏரிகள் 70%-100% , 123 ஏரிகள் 50% - 75% , 204 ஏரிகள் 25% - 50% , 336 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் ஆதாரங்கள் உயரம் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் எம்.ஆர்.சி. நகர், பட்டினம்பாக்கம், மெரினா கடற்கரை, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், பழையனூர், புலிப்பாக்கம், மேல் ஏரிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது. மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி. காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion