மேலும் அறிய

மொத்தமாக மாறும் சென்னை துறைமுகம்.. அசர வைக்கும் கான்கிரீட் கடற்கரை சாலை.. ஒரு ரவுண்ட் போவோமா?

சென்னை துறைமுகத்தில் ரூ.73.91 கோடி திட்ட செலவில் நான்கு புதிய ஏற்றுமதி-இறக்குமதி கிடங்குகள் கட்டுவது உட்பட சீரிய பலன்கள் தரும் பல்வேறு திட்டங்களையும் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.

சென்னைத் துறைமுக ஆணையம், காமராஜர் துறைமுக நிறுவனம் ஆகியவற்றில் பல்வேறு அத்தியாவசிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் இன்று சென்னை வந்தார்.

ரூ. 187.33 கோடி மதிப்பிலான இந்தத் திட்டங்கள் துறைமுக உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், வர்த்தக நடவடிக்கைகளை நெறிப்படுத்தவும், இந்தியாவின் பசுமை துறைமுக முயற்சிகளை மேம்படுத்தவும் தொடங்கப்பட்டுள்ளன.

மொத்தமாக மாறும் சென்னை துறைமுகம்:

துறைமுகங்களை நவீனமயமாக்குவதிலும் கடல்சார் இணைப்பை மேம்படுத்துவதிலும் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை தமது உரையில் அடிக்கோடிட்டுக் காட்டிய மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், "உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவை முக்கியமான நாடாக நிலைநிறுத்துவதில் இந்தத் திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன" என்றார்.

சென்னை துறைமுகத்தில் ரூ.73.91 கோடி திட்ட செலவில் நான்கு புதிய ஏற்றுமதி-இறக்குமதி கிடங்குகள் கட்டுவது உட்பட சீரிய பலன்கள் தரும் பல்வேறு திட்டங்களையும் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். 18,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் கிடங்குகள், பிரத்யேகமான, சுத்தமான, விவசாய பொருட்கள், உணவு தானியங்கள் உள்ளிட்ட முக்கிய சரக்குகளுக்கு அத்தியாவசிய சேவையை வழங்கும்.

சாகர்மாலா திட்டத்தின் கீழ் முழுமையாக நிதியளிக்கப்படும் இந்த திட்டம், வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக முக்கிய துறைமுகங்களில் தனது வர்த்தக திறனை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் இலக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

கொசஸ்தலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாயில் புதிய ரயில் பாலங்கள்: 

கிடங்குகள் தவிர, புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் கடற்கரை சாலையையும் மத்திய அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது 350 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் கொண்டது. ரூ. 4 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட இச்சாலை, சென்னை துறைமுகத்தில் உள்ள இரண்டாவது சரக்குப் பெட்டக முனையத்திற்கு கனரக சரக்குகளையும் சரக்குப் பெட்டகங்களையும் எளிதாக எடுத்துச் செல்ல உதவுகிறது.

புதிய சாலையானது அணுகலை மேம்படுத்துகிறது, தூசு  மாசுபாட்டைக் குறைக்கிறது, சுற்றுச்சூழல் இணக்கத்தை ஊக்குவிக்கிறது. துறைமுக உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் இது குறிக்கிறது.

போக்குவரத்தை மேலும் ஊக்கமளிக்கும் வகையில், 88.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காமராஜர் துறைமுக நிறுவனத்தில் தெற்கு ரயில்வே இணைப்பை இரட்டை ரயில்பாதையாக மாற்றும் திட்டத்தையும் மத்திய அமைச்சர் சோனாவால் தொடங்கி வைத்தார்.

வளர்ந்து வரும் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தக தேவைகளுக்கு ஏற்ப இந்த விரிவாக்கம் 2.65 கி.மீ ரயில் பாதையை கூடுதலாக்குகிறது. இதில் கொசஸ்தலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் மீது மூன்று புதிய ரயில் பாலங்கள் கட்டப்படுவதும், ஆளில்லா லெவல் கிராசிங்குகளை இண்டர்லாக்டு கிராசிங்குகளாக மாற்றுவதும் உள்ளடங்கும். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget