மேலும் அறிய

Chennai Encounter: சென்னையில் என்கவுன்டர் - ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக்கொலை - நடந்தது என்ன?

Chennai Encounter: சென்னையில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Chennai Encounter: சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் மீது, 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சென்னையில் ரவுடி சுட்டுக்கொலை:

உயிரிழந்த நபர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கைது செய்ய சென்ற போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து தற்காப்பிற்காக சுட்டதில், ரவுடி காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை வியாசர்பாடி குடியிருப்பு பகுதி அருகே இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில்,  காக்கா தோப்பு பாலஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?

சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் உள்ள பி.ஆர்.என் கார்டன், வள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பாலாஜி. 36 வயதாகும் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது கொலை மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட 50 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை தொடர்பாக பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் குண்டு வீசியது உட்பட பல வழக்குகளில் இவர் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், புளியந்தோப்பு பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முற்பட்டுள்ளார். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னையில் தொடரும் என்கவுன்டர்கள்:

சென்னை மாநகர காவல் ஆணையராக, அருண் பொறுப்பேற்ற பின் நடைபெறும் இரண்டாவது என்கவுன்டர் இதுவாகும். முன்னதாக பகுஜன் சமாஜ்கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தொடர்புடைய குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார். அதைதொடர்ந்து தற்போது சரித்திர பதிவேட்டு குற்றவாளியான பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சென்னையில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன, சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட் வரும் நிலையில், அடுத்தடுத்து இரண்டு என்கவுன்டர்கள் அரங்கேறியுள்ளன. இது ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நான் GOVT ஸ்கூல் தான்” வம்பிழுத்த நிர்மலா! வச்சு செய்த கார்கேபிச்சை போட்டால் சிறையா? பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு! எச்சரிக்கும் கலெக்டர்Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போதே மரணம்; கருணை அடிப்படையில் வேலை யாருக்கு? ஆர்டிஐயில் வெளியான தகவல்!
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போதே மரணம்; கருணை அடிப்படையில் வேலை யாருக்கு? ஆர்டிஐயில் வெளியான தகவல்!
Embed widget