மேலும் அறிய

Parandur Airport : தொடரும் பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்டம்..! என்னதான் நடக்கிறது அங்கே..?

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 126 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. இதற்கென பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய விமான நிலையம் ஏகனாபுரத்தை மையப்படுத்தி அமைக்கப்படவுள்ளது என்ற தகவல் பரவியதை தொடர்ந்து, புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Parandur Airport : தொடரும் பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்டம்..! என்னதான் நடக்கிறது அங்கே..?
 
126 வது நாளாக நடைபெறும் போராட்டம்
 
குறிப்பாக தங்களது குடியிருப்பு பகுதிகள்,விவசாய நிலங்கள், நீர் நிலைகள், விவசாயத்தை அழித்து கொண்டு வரப்படும் இந்த புதிய விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாங்கள் வாழும் இக்கிராமத்தை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம் என கூறியும்,தங்கள் பகுதிகளில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தொடர்ந்து, 100 நாட்களைக் கடந்து, இரவு நேர அடையாள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Parandur Airport : தொடரும் பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்டம்..! என்னதான் நடக்கிறது அங்கே..?
இந்நிலையில் இந்த பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிராக ஏகனாபுரத்தில் 126 வது நாளாக இரவு நேர அடையாள போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து வயதுடைய தரப்பினரும் ஒன்று கூட தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி போரட்டத்தில் ஈடுபட்டனர்.
 
சென்னை பசுமை விமான நிலையம்
 
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும் , மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி ,குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன.  இந்த நிலையில்தான் அப்பகுதி மக்கள் 125 நாட்களை கடந்து, தொடர்ந்து இரவுநேர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
 
Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
Ration Shop: வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் -  காரணம் என்ன..?
வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் - காரணம் என்ன..?
"விஜய்யைப் பாத்து சீமானுக்கு பயம் வந்துடுச்சு" காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
6 ஆண்டாகியும் வெளியாகாத டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
6 ஆண்டாகியும் வெளியாகாத டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
Ration Shop: வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் -  காரணம் என்ன..?
வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் - காரணம் என்ன..?
"விஜய்யைப் பாத்து சீமானுக்கு பயம் வந்துடுச்சு" காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
6 ஆண்டாகியும் வெளியாகாத டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
6 ஆண்டாகியும் வெளியாகாத டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
Train Cancelled: பயணிகள் கவனத்திற்கு... விழுப்புரம் - திருச்சி ரயில் பகுதியளவில் ரத்து - எப்போது வரை தெரியுமா?
பயணிகள் கவனத்திற்கு... விழுப்புரம் - திருச்சி ரயில் பகுதியளவில் ரத்து - எப்போது வரை தெரியுமா?
Breaking News LIVE 5th NOV 2024: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: பக்தர்கள் வசதிக்காக க்யூஆர் குறியீடு வசதி அறிமுகம்
Breaking News LIVE 5th NOV 2024: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: பக்தர்கள் வசதிக்காக க்யூஆர் குறியீடு வசதி அறிமுகம்
Kamala Harris : ”கமலா ஹாரிஸ் சொந்த ஊரில் வழிபாடு” அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற மக்கள் பிரார்த்தனை..!
Kamala Harris : ”கமலா ஹாரிஸ் சொந்த ஊரில் வழிபாடு” அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற மக்கள் பிரார்த்தனை..!
Supreme Court Madarsa Act: உ.பியில் 16,000 மதரஸாக்களை கலைத்த உத்தரவு ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு, நடந்தது என்ன?
Supreme Court Madarsa Act: உ.பியில் 16,000 மதரஸாக்களை கலைத்த உத்தரவு ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு, நடந்தது என்ன?
Embed widget