மேலும் அறிய
Advertisement
புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை: திருவத்திபுரம் கோயிலில் மொட்டை அடிக்க வந்தவர்களை விரட்டிய போலீஸ்
’’கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வழிபாட்டுத்தளங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் தடை விதித்துள்ளது’’
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத ஸ்வாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும், இங்கு வருடம் தோறும் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம் அதுமட்டுமின்றி எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இந்த கொரோனா காலகட்டம் தொடங்கிய முதல் இங்கு பெரிதும் திருமணங்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் திருமணத்திற்கென வேண்டிக்கொண்டவர்கள் மற்றும் முன்கூட்டியே முடிவு செய்தவர்கள் மட்டும் இங்கே திருமணம் செய்துகொண்டு வந்தனர்.
இந்தநிலையில் தற்பொழுது கொரோனா மூன்றாம் அலை தொடங்கும் அச்சம் உள்ளதால் தமிழக அரசே வாரம் மூன்று நாட்கள் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு கடலூர் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பலர் மொட்டையடித்து நேர்த்திக்கடனும் செலுத்துவார்கள். தற்போது பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நடைபெறுவதால், கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.
ஆண்டுதோறும் புரட்டாசி 3 ஆவது சனிக்கிழமை அன்று கோயிலில் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய நாட்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனால் புரட்டாசி 3 ஆவது சனிக்கிழமையான இன்று கோயிலில் பெருமாளை தரிசிக்க முடியாது என்று எண்ணிய பக்தர்கள் கோயில் கோபுர தரிசனம் செய்ய காலையில் இருந்தே ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். மக்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் நுழைவு வாயிலிலே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்த அருகாமையில் உள்ள கெடிலம் ஆற்றின் ஓரமாக மொட்டை அடித்து நேர்ததிக்கடன் செலுத்தியவர்களியும் காவல் துறையினர் விரட்டினர். இதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நுழைவு வாயிலல் இருந்த சிறிய கோயிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர். பின் அங்கும் மக்கள் கூட்டம் அதிகளவு கூடியதால் காவல் துறையினர் கூட்டத்தை களைத்து திருப்பி அனுப்பினா், இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion