மேலும் அறிய

இனி பவர் பேங்க் பயன்படுத்த தடை !! புதிய கட்டுப்பாடுகள் , பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு

விமானங்களில் மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை 'சார்ஜ்' செய்வதற்கு 'பவர் பேங்க்கை பயன்படுத்த, மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தடை

மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் பவர் பேங்க்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போன் , லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய பவர் பேங்க் எனப்படும் சாதனம் பயன்படுத்தப்படுகிறது. நவீன உலகில் பெரும்பாலானோர் பவர் பேங்கை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வெளியூர், வெளிநாடு பயணங்கள் போகும் போது, பவர் பேங்கையும் கையோடு எடுத்துச் செல்லும் நிலை தொடர்கிறது.

அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றும் சம்பவம்

சமீப காலமாக விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் பவர் பேங்க், அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து, பல முன்னணி விமான நிறுவனங்கள் பவர் பேங்க் சாதனத்தை விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளன. இந்நிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், விமானங்களில் பவர் பேங்க் சாதனத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்படுவதாவது ;

பவர் பேங்க் சாதனங்களில் லித்தியம் அயான் பேட்டரி உள்ளது. இவை, கடுமையான வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டவை. மேலும், அதில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் மின்கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, பவர் பேங்க் சாதனத்தை பயணியர் தங்கள் கைப்பையில் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

பவர் பேங்க் - தீ பிடித்தால் கண்டு பிடிப்பது கடினம்

பயணத்தின் போது எடுத்துச் செல்லப்படும் வேறு எந்த பைகளிலும், அதை வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருக்கும் போது, பவர் பேங்க் எளிதில் தீப்பற்றினால் கண்டுபிடிப்பது கடினம் என்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைப்பையில் எடுத்துச் செல்லப்படும் பவர் பேங்கை பயன்படுத்தி விமானங்களில் எந்த மின்னணு பொருட்களும் சார்ஜ் செய்யப்படக் கூடாது. எந்தவொரு சாதனமும் வெப்பம், புகை அல்லது அசாதாரண வாசனையை வெளியிட்டால், பயணியர் உடனடியாக விமானத்தில் உள்ள ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

விமானத்தில் கருவிகள் வைக்கப்பட வேண்டும்

லித்தியம் பேட்டரி விபத்துகள் தொடர்பான அனைத்து பாதுகாப்பு சிக்கல்கள் குறித்த அறிக்கையை, விமான நிறுவனங்கள் உடனடியாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு அளிக்க வேண்டும். பயணியர் பயன்படுத்தும் பல வகையான லித்தியம் பேட்டரிகளை பகுப்பாய்வு செய்து, ஆபத்து ஏற்படுவது தொடர்பான காரணிகளை விமான நிறுவனங்கள் ஆராய வேண்டும்.

அதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். லித்தியம் பேட்டரியால் ஏற்படும் தீ விபத்துகளை கட்டுப்படுத்த தேவையான கருவிகள் விமானத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய விபத்துகளை கையாள, விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Embed widget