சென்னைக்கே டஃப்..! இனி எல்லாமே பூந்தமல்லி தான்..! ஒவ்வொரு திட்டமும் பயங்கரமா இருக்கே..
Poonamallee Future Development: பூந்தமல்லியில் முன்னெடுக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள், எதிர்காலத்தில் அதனை ஒரு சிறந்த புறநகரமாக மேம்படுத்தும் என நம்பப்படுகிறது

Poonamallee: பூந்தமல்லியை சுற்றி முன்னெடுக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
காலியாகும் பூந்தமல்லி பேருந்து நிலையம்:
நகர்ப்புறங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களை மாற்ற அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை அடுத்த திருமழிசை அருகே உள்ள குத்தம்பாக்கத்தில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில், 150 பேருந்துகளை கையாளும் வகையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அப்படி பயன்பாட்டிற்கு வந்தால், தற்போது வரை பூந்தமல்லியில் இருந்து இயக்கப்பட்டு வரும், மஃப்சல் பேருந்துகள் இனி குத்தம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்படும்.
பூந்தமல்லி பேருந்து நிலையம் என்னவாகும்?
தற்போது வேலூர், கிருஷ்ணகிரி, வாலாஜா, ஓசூர், திருப்பத்தூர் மற்றும் பெங்களூருவிற்கு, பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து TNSTC மற்றும் SETC பேருந்துகள் CMBT-யிலிருந்து குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும். இதேபோன்று குத்தம்பாக்கம் முனையத்திலிருந்து 170 MTC பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து சேவைகளும் புதிய குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படும். இதனால் மொத்தமாக காலியாகும் பூந்தமல்லி பேருந்து நிலையம் என்ன ஆகும்? மொத்தமாக மூடப்படுமா? அல்லது வேறு ஏதேனும் பயன்பாட்டிற்காக அந்த நிலம் பயன்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மின்சார பேருந்து முனையம்:
வெளியாகியுள்ள தகவல்களின்படி, பூந்தமல்லி பேருந்து நிலையம் 120 மின்சார பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் இயக்கத்திற்கான பிரத்யேக மையமாக மாற்றப்படும். ”காலநிலைக்கு உகந்த நகர்ப்புற இயக்கம்' திட்டத்தின் ஒரு பகுதியாக, பெருநகர போக்குவரத்துக் கழகம் (MTC) மொத்தம் 500 மின்சார பேருந்துகளை வாங்க உள்ளது. அவற்றில் சென்னைக்கு 320 மின்சார பேருந்துகளும், மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு முறையே 100 மற்றும் 80 மின்சார பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 340 மின்சார ஏசி பேருந்துகளில், மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கான 320 மின்சார பேருந்துகளும் குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கும். அதே நேரத்தில் கோயம்புத்தூருக்கு வெறும் 20 குளிர்சாதன வசதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மதுரைக்கு அத்தகையை பேருந்துகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. இந்த திட்டத்தின் கீழ் சென்னைக்கு ஒதுக்கப்படும் பேருந்துகளில் ஒரு பங்கை, பராமரிக்கவும் இயக்கவும் தான் தற்போதைய பூந்தமல்லி பேருந்து நிலையம் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதற்கேற்றவாறு அந்த பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
பூந்தமல்லி மெட்ரோ சேவை:
இதனிடையே, பூந்தமல்லியை நகருடன் மிகவும் எளிதாக இணைக்கும் வகையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு இறுதி அடுத்த ஆண்டு இறுதிக்கும் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் சேவை பயன்பட்டிற்கு வரக்கூடும். அப்படி நடந்தால், நகரத்திற்கான அணுகல் மற்றும் போக்குவரத்தை நூறு மடங்கு எளிதாகவும் வசதியாகவும் மாற்றுகிறது. சென்னையில் இருந்து வெகுதூரத்தில் உள்ளது என்ற குறைபாட்டை நீக்கி, வரும் ஆண்டுகளில் மிகவும் விரும்பத்தக்க முதலீடுகளுக்கான நகரமாக பூந்தமல்லியை மாற்றும். மெட்ரோ வழியாக பூந்தமல்லி அங்கிருந்து குத்தம்பாக்கத்தை அடைந்து, அங்கிருந்து வடமாவட்டங்களின் பல்வேறு பயணங்களுக்கும் பயணிப்பது எளிதாகிவிடும்.
பரந்தூர் விமான நிலையம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள புதிய சர்வதேச விமான நிலையம் பெரும் பொருளாதார ஊக்கத்தை அளிக்கும் என கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) பூந்தமல்லியிலிருந்து பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ பாதை நீட்டிப்பைத் திட்டமிட்டுள்ளது. 19 நிலையங்களுடன் 43.63 கி.மீ பாதை, நகரின் இரண்டாவது விமான நிலையத்தை பூந்தமல்லியுடன் இணைக்கிறது.
ஐடி சிறப்பு பொருளாதார மண்டலம்
மவுண்ட் பூந்தமல்லி சாலையில் 3 ஆம் கட்ட விரிவாக்கத்தை DLF சைபர் சிட்டி தொடங்கியதன் விளைவாக, இது OMR 2.0 ஆக மாற்றம் கண்டுள்ளது. 500 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் 1.6 மில்லியன் சதுர அடி பிரீமியம் அலுவலக இடத்தை வழங்கும். பரந்தூர் விமான நிலையத்துடன் மெட்ரோ ரயில் பாதை, இப்பகுதியின் வணிக திறனை விரைவாக அதிகரிக்கும் காரணியாக இருக்கலாம். தற்போது, செயிண்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் பூந்தமல்லி ஆகியவற்றின் 15 கி.மீ நீளத்தில் 3.5 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தை உள்ளடக்கிய 3 IT பூங்காக்களும் உள்ளன. இது ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், புறநகர்ப் பகுதிக்கு ஏராளமான மக்கள் இடம்பெயர்வதற்கும் வழிவகுக்கிறது.
மாங்காட்டில் புதிய வணிக வளாகம்:
பூந்தமல்லியில் இருந்து 15 நிமிட பயண தூரத்தில் உள்ள மாங்காடு பகுதியில் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இது மெட்ரோ ரயில் பாதை திட்டத்தால் வழங்கப்படும் எளிதான அணுகலின் விளைவாகும். குறிப்பிடத்தக்க வகையில், சென்னையின் மேற்கு புறநகர்ப் பகுதியை ஆக்கிரமித்துள்ள முதல் நடுத்தர அளவிலான மாலும் இதுவாகும், இதன் காரணமாக எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. 6 தளங்களை கொண்ட இந்த மால் ஷாப்பிங்கிற்கான நல்வாய்ப்பை வழங்குவதோடு, 3200 சினிமா இருக்கைகளை கொண்ட திரையரங்குகளையும் கொண்டிருக்கும்.
முதலீட்டிற்கான நகரம்
அபார வளர்ச்சியை கண்டு பல கட்டுமான நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் பூந்தமல்லி மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சென்னையின் மிகவும் விரும்பப்படும் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாக மாறி வருகிறது. எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டால், பூந்தமல்லியில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரமாகும். இந்த பகுதியில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரமாகும். சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளுக்கு அருகாமையில் இருப்பது மற்றும் போக்குவரத்து உட்பட அனைத்து உட்கட்டமைப்புகளும் சிறப்பாக இருப்பதால் உங்கள் முதலீட்டிற்கான சிறந்த இடமாக பூந்தமல்லி உருவெடுக்கிறது.
பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை
ஸ்ரீபெரும்புதூர் வழியாகச் செல்லும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் தேசிய விரைவுச் சாலை 7 அல்லது பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை, பூந்தமல்லியில் இருந்து மிக அருகில் உள்ளது. இந்த சாலை நாட்டின் இரண்டு பெரிய தகவல் தொழில்நுட்ப மையங்களை இணைக்கிறது. மெட்ரோ ரயில் இணைப்பைக் கொண்ட திருமழிசையில் அதே பாதையில் ஒரு அரசாங்க செயற்கைக்கோள் டவுன்ஷிப் திட்டமும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வேலைவாய்ப்பும் அப்பகுதி மக்களுக்கு குவிய உள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட திட்டங்களால் எதிர்காலத்தில் சென்னைக்கு நிகரான வளர்ச்சி மூலம் பூந்தமல்லியும் தவிர்க்க முடியாத நகரமாக உருவாகக் கூடும் என நம்பப்படுகிறது.





















