சேரன் ஆட்டோகிராப் ரீ-ரிலிஸ் தேதி!

Published by: ஜான்சி ராணி

கல்லூரி கால நினைவுகள் பற்றிய படம். சேரன் திருமணத்திற்காக பழைய நண்பர்களுக்கு பத்திரிகை கொடுக்க செல்லும்போது கல்லூரி நாட்கள் பற்றி நினைத்துப் பார்ப்பார்.

நியாபகம் வருதே நியாபகம் வருதே’ ஹீரோ, சைக்கிளில் பள்ளிக்கும் செல்லும்போது வரும் பாடல், ‘ஒவ்வாெரு பூக்களுமே’ பாடல் ரசிகர்கள் அதிகம் ரசித்து கேட்டவை என்று சொல்லலாம்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாவது ஆட்டோகிராஃப்

2004ல் வெளியான போது ஹிட் ஆன ஆட்டோகிராஃப் திரைப்படமும் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் சேரன்தான்.

ஆட்டோகிராப் வெளியான போது 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது.

மூன்று தேசிய விருதுகள் வென்றது. 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை பாடிய சித்ரா, எழுதிய பா.விஜய் இருவரும் தேசிய விருது பெற்றனர்.

ஆட்டோகிராஃப் திரைப்படத்தில், சேரன் ஹீரோவாக நடிக்க அவருக்கு வெவ்வேறு காதலிகளாக கோபிகா, மல்லிகா, கனிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சினேகா, அவருக்கு தோழியாக நடித்திருந்தார். இளவரசு, கிருஷ்ணா, பெஞ்சமின், ராஜேஷ் உள்ளிட்டோர் துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஆட்டோகிராஃப் திரைப்படம், மே 16ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அப்படத்தின் இயக்குநர் சேரன் தெரிவித்திருக்கிறார்.