மேலும் அறிய
Advertisement
Crime : காதலனை தாக்கி, இளம்பெண்ணுக்கு வன்கொடுமை.. விறுவிறு சேஸிங்.. 12 மணிநேர வேட்டை.. சபாஷ் போடவைத்த காஞ்சிபுரம் போலீஸார்
" காதலன் கண்முன்னே கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்தது"
கூட்டு பாலியல் வன்புணர்வு
காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவியும், மாணவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில், உள்ள குண்டுகுளம் என்னுமிடத்தில் தனியாக சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, அந்த வழியாக மது அருந்திவிட்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல், காதலன் மற்றும் காதலி ஆகிய இருவரை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனை அடுத்து அந்த 6 பேர் கொண்ட , காதலன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி காதலன் கண்முன்னே காதலியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதால் செய்வது அறியாமல் காதலன் கதறி உள்ளார். இருந்தும் , அந்த மர்ம கும்பல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
தாமாக புகார் எடுத்துக்கொண்ட காவல்துறை
இது குறித்து காவல் துறைக்கு எவ்வித புகாரும் வரவில்லை என்றாலும், சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலீசார், விசாரணை நடத்தினர். குறிப்பாக காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் தாமாகவே இந்த புகாரை கையில் எடுத்து, விசாரணையை துரிதப்படுத்தினர். மேலும், இதே பகுதியில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
"தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை"
அந்தப் பகுதியில் தினமும் மது அருந்தும் நபர்கள், ஆடு மற்றும் மாடு மேய்ப்பவர்கள் உள்ளிட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் கும்பல் ஒன்று அடிக்கடி , இந்த பகுதியில் சுற்றி திரிவது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இவர்கள் மீது காவல்துறை இருக்கு சந்தேகம் எழவே, சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்க முயற்சி செய்தபோது, தங்கள் பகுதியிலிருந்து தப்பி தலைமறைவானது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் எப்படியாவது கைது செய்ய வேண்டும் என தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மறுபுறம் பாதிக்கப்பட்ட பெண்ணை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்தனர்.
உடைந்தது கை , கால்
காஞ்சிபுரம் பகுதியில் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்ததால் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, இதில் தமிழரசனை தவிர மற்ற 5 பேர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை துரத்திப் பிடிக்க முயற்சி செய்தபோது. கீழே விழுந்து 3 பேருக்கு கால்களிலும் 2 பேருக்கு கையும் உடைந்தது. விமல் குமார் -வயது 25, ஊமை (எ) மணிகண்டன் , விக்கி (எ) விக்னேஷ் - வயது 22, மரம் (எ) தென்னரசு - வயது 19, ஊக்கு (எ) சிவகுமார்-வயது 22 மற்றும் தமிழரசன் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது.
இதனை அடுத்து கை, கால் உடைந்தவர்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவு கட்டு போட்டு விட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 6 பேரும், அப்பகுதியில் அடிக்கடி இதே வேலையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. புகார் கொடுப்பதற்கு முன்பாகவே காவல்துறையினர் விசாரணையில், கையில் எடுத்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 6 பேரை 12 மணிநேரத்தில் கைது செய்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion