Kilambakkam Skywalk Bridge: வாவ்...! சூப்பர் கிளாம்பாக்கத்திற்கு வந்த சூப்பர் அப்டேட்..! ஃபாரின் மாதிரி இருக்குபா..!
kilambakkam sky walk bridge :சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
kilambakkam sky walk bridge கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் ரயில்வே நிலையத்தை இணைக்கக்கூடிய ஆகாய நடைமேடை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( kilambakkam bus stand )
சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் அதிகரிக்கும் மக்கள் தொகை கருத்தில் கொண்டும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ( kilambakkam railway station )
தமிழ்நாடு அரசின் நிதியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் கிளாம்பாக்கம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வண்டலூர் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டம்
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில், மூன்று நடைமுறைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் நிலைய மேலாளர் அறை, ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், டிக்கெட் அலுவலகம், குடிநீர் வசதி, இருக்கை வசதி என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரயில்வே நடைமேடைகளில் சிறுசிறு கடைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் நிலையம் ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகாய நடைபாதை ( kilambakkam sky walk bridge )
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி ஆகியவற்றின் கூடிய நடை மேம்பாலம் அமைய உள்ளது.
பயன்கள் என்ன ?
ஆகாய நடை பாலம்அமைக்கப்பட்டால், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள், எளிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தடைய முடியும். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மேல் இந்த ஆகாய நடை பாலம் அமைய இருப்பதால் , சாலையை ஆபத்தான முறையில் கடக்க வேண்டிய சூழ் ஏற்படாது. இது பயணிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சார ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தவுடன், பொதுமக்கள் பெரும்பாலானோர் கிளாம்பாக்கம் வருவதற்கு மின்சார ரயில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாதிரி புகைப்படங்கள் வெளியீடு
தற்பொழுது அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆகாய நடைபாதை எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. வெளியாகி உள்ள புகைப்படத்தில், ஆகாய நடை பாதை எப்படி அமைய உள்ளது என்பது குறித்த மாதிரி கட்டிட வடிவமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்திலும் வேகமாக பரவி வருகின்றன.