மேலும் அறிய

திருவண்ணாமலையில் புற்றுநோயுடன் அவதிப்படும் வெளிநாட்டு சாமியார் ... உயிர்வாழ சிகிச்சை அளிக்க கலெக்டரிடம் மனு...

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் புற்றுநோயால் அவதிப்படும் வெளிநாட்டு சாமியாருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென மனு அளித்துள்ளார்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் உலகப் புகழ்பெற்ற கோவிலாகும். இங்கு தினமும் வெளிநாட்டு, வெளிமாநிலம் மற்றும் வெளியூர் போன்ற இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். சிவனே மலையாக காட்சி தரக்கூடிய மலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் பௌர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள், திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களில் வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவில் உள்ளனர். ஆன்மீக பயணம் தேடி ஏராளமானவர்கள் திருவண்ணாமலைக்கு ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். அவ்வாறு 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வருகை தந்த வெளிநாட்டு லண்டனைச் சேர்ந்த பயணி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். அவர் தனக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

திருவண்ணாமலையில் புற்றுநோயுடன் அவதிப்படும் வெளிநாட்டு சாமியார் ... உயிர்வாழ சிகிச்சை அளிக்க கலெக்டரிடம் மனு...

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கிளைவ் பற்றி நியூ மேன் வயது (79). இவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர். 30 ஆண்டுகளுக்கு முன்பு தழிழகத்திற்கு வருகை புரிந்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆன்மீக பயனத்தை முடித்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தார். பின்னர் நாளடைவில் அவர் திருவண்ணாமலை வாசியாகவே மாறியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலையில் இடது பக்கம் முழுவதும் புண்கள் ஆகி உள்ளது.  திருவண்ணாமலை நகரின் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். அப்போது அவரை இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கோரப் சுதன் வயது (35) என்ற நபர் பார்த்துள்ளார். பின்னர் அவருக்கு கோரசுதன் அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கோரப் சுதன் ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் திரும்ப உள்ளதால் லண்டனைச் சேர்ந்த முதியவர் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டார். இதுகுறித்து திருவண்ணாமலை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த முதியோரை மீட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்‌. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி கோரிக்கை வைத்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தறப்பில் தெரிவிக்கப்பட்டது. 

திருவண்ணாமலையில் புற்றுநோயுடன் அவதிப்படும் வெளிநாட்டு சாமியார் ... உயிர்வாழ சிகிச்சை அளிக்க கலெக்டரிடம் மனு...

இது குறித்து சமூக சேவகர் மணிமாறனிடம் பேசுகையில்;  

ஆன்மிக தேடலுக்கு வந்த லண்டனை சேர்ந்த முதியவரை இங்கு உள்ள பக்தர்கள் அவரை காலிபாபா என்று அழைத்து வந்தனர். அவர் கிரிவலப் பாதையில் தினந்தோறும் சைக்கிளில் பயணம் செய்து வருவார். தற்போது அவருக்கு ஞாபகம் மறதி ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் உயிருக்கும் போராடி வருகிறார். அவர் குடும்பம் குறித்த விவரங்கள் ஏதும் அவருக்கு தெரியவில்லை. அவர் தன்னுடைய ஆவணங்களையும் தொலைத்து விட்டார்‌. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்இல்லையென்றால் சில நாட்களில் உயிரிழந்து விடுவார் என்று கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
Delhi Election; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
டெல்லி தேர்தல் ; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
Embed widget