மேலும் அறிய
Petition Cell App : இனி கவலை வேண்டாம்.. காவலர்களை பார்த்து பயப்பட வேண்டாம்.. வந்துவிட்டது சூப்பர் App
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் புதிய செயலி துவங்கப்பட்டுள்ளது.
![Petition Cell App : இனி கவலை வேண்டாம்.. காவலர்களை பார்த்து பயப்பட வேண்டாம்.. வந்துவிட்டது சூப்பர் App Petition Cell App new application has been launched by Chengalpattu District Police Petition Cell App : இனி கவலை வேண்டாம்.. காவலர்களை பார்த்து பயப்பட வேண்டாம்.. வந்துவிட்டது சூப்பர் App](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/d5656babb39c6f1a3b35e740e6758b861681313938043109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செயலி துவக்கம்
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் புதிய செயலி துவங்கப்பட்டுள்ளது.
மனுபிரிவு தனியாக இயங்கி வருகிறது
செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் மூன்று உட்கோட்டங்களும், 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், மூன்று மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களின் வசதிக்கேற்ப, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, எளிதாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறவும் அவற்றை சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் GREAT (Grievance Redressal and Tracking System) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
![Petition Cell App : இனி கவலை வேண்டாம்.. காவலர்களை பார்த்து பயப்பட வேண்டாம்.. வந்துவிட்டது சூப்பர் App](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/3aacb5dde8bbcf8a96e2e1fe8187d45d1681313854307109_original.jpg)
செயலி எப்படி செயல்படுகிறது ?
இச்செயலியின் மூலம் முதலாவதாக, மனு கொடுப்பவரின் விவரமும் மனுவின்தன்மை பற்றியும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்து அதற்கென தனியாக ஒரு மனு எண் (Complaint ID) ஒதுக்கப்படும். இரண்டாவதாக, அம்மனுவினை விசாரிக்கும் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு அம்மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை பதிவேற்றம் செய்யப்பட்டு பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரத்தை தெரிவிக்கப்படும்.
![Petition Cell App : இனி கவலை வேண்டாம்.. காவலர்களை பார்த்து பயப்பட வேண்டாம்.. வந்துவிட்டது சூப்பர் App](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/2f003e8293dc0afd03c140e330ee2ac91681313882578109_original.jpg)
உடனடி தீர்வுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
இதற்கென, செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் தனித்தனியாக மொத்தம் 38 வரவேற்பாளர்கள்
( Receptionist) பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் மனுக்களின் விவரத்தினையும் அதற்கான தீர்வினையும் எளிதாகவும் விரைவாகவும் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில், பெற்றுக்கொள்ள வழிவகை செய்ய இயலும்.
மாவட்ட தலைமையகத்தில் நியமிக்கப்படும் அலுவலர்கள்
மேலும், அவ்வாறு கொடுத்த புகார் மனுக்களின் மீது முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதா எனவும், விசாரணை அதிகாரியின், நடத்தைப் பற்றியும், மனுவில் கொடுக்கப்பட்ட அனைத்து எதிர்மனுதாரர்களையும் முறையாக அழைத்து விசாரணை செய்யப்பட்டதா எனவும், விசாரணை திருப்திகரமாக இருந்ததா எனவும், விசாரணை அதிகாரியால் கையூட்டு பெறப்பட்டதா கேள்விகளை மனுதாரர்களிடமிருந்து கேட்டு அதை மாவட்ட தலைமையகத்தில் நியமிக்கப்படும் அலுவலர்களால், இதே செயலியின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நேரடியாக கண்காணிக்கப்படும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
![Petition Cell App : இனி கவலை வேண்டாம்.. காவலர்களை பார்த்து பயப்பட வேண்டாம்.. வந்துவிட்டது சூப்பர் App](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/bc42347b7bcc54d8748252fe7a47240a1681313909783109_original.jpg)
இதன் துவக்கவிழா வடக்கு மண்டலம் காவல்துறை தலைவர் டாக்டர்.கண்ணன், IPS அவர்களின் மேற்பார்வையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பிரதீப், IPS அவர்களின் தலைமையில், இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion