மேலும் அறிய

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நோட்டாவுக்கு டாட்டா..! என்ன சொல்கிறார்கள் அரசியல் கட்சியினர்..!

நகர்ப்புற தேர்தலில் நோட்டா இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்களை பார்க்கலாம்.

போட்டியிடும் எந்த வேட்பாளர்களையும் பிடிக்கவில்லை, ஆனால் ஜனநாயக கடமையை செலுத்த வேண்டும், அப்படிப்பட்டவர்களுக்கு உருவாக்கப்பட்ட முறைதான் நோட்டா. முதலில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961 ஆன் படி 49- ஓ எனும் முறை கொண்டுவரப்பட்டது. எனினும்,  வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர், வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் அதைத் தெரிவிக்க வேண்டும். அதற்கான படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்றெல்லாம் நடைமுறைகள் இருந்தன. இது வாக்களிப்பதற்கான ரகசியக் கொள்கையை மீறுவதாக விமர்சனங்கள் எழுந்தன. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நோட்டாவுக்கு டாட்டா..! என்ன சொல்கிறார்கள் அரசியல் கட்சியினர்..!
 
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் 2013-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வாக்குச் சீட்டுகளிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் நோட்டா ( NONE OF THE ABOVE ) வசதியை ஏற்படுத்த உத்தரவிட்டது.  இதன்மூலம், வாக்காளர் நோட்டாவுக்கு வாக்களித்த ரகசியம் காக்கப்படும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. 2013-ல் டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
 
தமிழ்நாட்டில் ஏற்காடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. நடந்து முடிந்த 2021 தமிழக  சட்டமன்றத் தேர்தலில் 3,45,538 ( 0. 75 %) பதிவாகியிருந்தது. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக உள்ள தேமுதிக ( 0.43 %) பெற்ற வாக்குகளை விட  நோட்டா பெற்ற வாக்குகள் அதிகம். மேலும் 6 இடங்களில் மறைமுகமாக வெற்றி தோல்வியை நோட்டா முடிவு செய்தது. ஒவ்வொரு தேர்தலிலும் பெரிய அளவு தாக்கம் இல்லை என்றாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நோட்டா, பேசு பொருளாக இருந்துள்ளது. சில சமயங்களில் நோட்டாவை விட கட்சிகள், குறைவாக வாக்குகளைப் பெறும், பொழுது விமர்சனங்களையும் பெற்று வந்துள்ளது.
 
நகர்ப்புற தேர்தல்
 
வருகின்ற 19 ஆம் தேதி தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு பணிகள் வேகம் பிடித்துள்ளது. நகர்ப்புற தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் நடைபெறும் எனவும், நோட்டா இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் யாராவது ஒரு வேட்பாளருக்கு மட்டுமே தங்களின் வாக்கினை செலுத்த முடியும். ஆகவே வாக்காளருக்கு பிடிக்கவில்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களிக்க இயலாது. ஏனெனில்  வாக்கு வேட்பாளருக்கே அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பல முடிவுகள் மாறியுள்ளன. அப்படியிருக்க தற்பொழுது நோட்டா இல்லாததால் பேசு பொருள் ஆகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சியினர் என்ன நினைக்கிறார்கள், என்பது குறித்து ஏபிபி நாடு சார்பில் கருத்து கேட்கப்பட்டது. 
 


 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நோட்டாவுக்கு டாட்டா..! என்ன சொல்கிறார்கள் அரசியல் கட்சியினர்..!
மக்கள் கேட்டால் ஓகே
 
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் கண்ணதாசன் கூறுகையில், நோட்டாவின் வாக்காளர்கள் வாக்களிக்கும் போது வாக்கு வீணாகி விடுகின்றன. வாக்களிக்காமல் வீட்டில் இருப்பவர்களுக்கும் , நோட்டாவில் வாக்களிக்கும் வாக்காளர்களும் ஒன்றுதான். ஒரு இடத்தில் 20 நபர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால், அனைவரையும் பிடிக்காமல் இருக்காது. நோட்டா சில நேரங்களில் வெற்றியை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் போன்று இல்லாமல், ஒன்று அல்லது இரண்டு வாக்குகள் கூட வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் , எனவே உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா தேவையில்லை,  இருந்தாலும் மக்கள் விருப்பப்பட்டு நோட்டா வேண்டும் என்றால், சட்டத்திருத்தம் கொண்டு வந்தாலும், எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என தெரிவித்தார்.
 
சட்டத் திருத்தத்தை உருவாக்கியிருக்க வேண்டும்
 
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறுகையில், "வாக்களிக்க விருப்பமில்லை நோட்டா என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் நோட்டா உறுதியாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மாநில தேர்தல் ஆணையம், இதுகுறித்து முன்பாகவே முடிவு செய்திருக்க வேண்டும். நோட்டா என்கிற வசதி நிச்சயம் மக்களுக்கு தேவை. தேர்தலுக்கு முன்னதாகவே மாநில தேர்தல் ஆணையம் சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும், அதை செய்ய மாநில தேர்தல் ஆணையம் தவறியுள்ளது. யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யும் உரிமை ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் உள்ளது, என்ற உச்ச நீதிமன்றத்தின்  உத்தரவின் அடிப்படையில், தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். மகாராஷ்டிராவில் வெற்றி பெறும் வேட்பாளரை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றால், மறுதேர்தல் நடத்தப்படும் என்ற சட்டத்திருத்தம் உள்ளது" என தெரிவித்தார்.
 
நோட்டா அரசியல் கட்சியின் சமிக்கை
 
இதுகுறித்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்தியன் கூறுகையில், "வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் மக்கள் அதைத் தெரிவிக்க இருக்கும் ஒரே வழி நோட்டா தான். இது அரசியல் கட்சிகளுக்கு தரும் சமிக்கை கூட. மக்கள் தங்களுடைய கருத்தை தெரிவிப்பதற்கு இருக்கும் ஒரே வழி நோட்டா. ஜனநாயக நாட்டில் மக்கள் வாக்களிப்பது உரிமை என்றால், ஏன் வாக்களிக்கவில்லை எனத் தெரிவிக்கும் உரிமையும் மக்களிடம் இருக்க வேண்டும். கண்டிப்பாக நோட்டாவை நடைமுறைப்படுத்த வேண்டும். நடைமுறைச் சிக்கலை காரணம் காட்டி  மறுப்பது ஏற்புடையதாக இருக்காது" எனத் தெரிவித்தார்.
 
உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா பிரச்சனை இல்லை
 
இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ  கூறுகையில், “உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா இல்லை என்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளரை பொறுத்து வாக்களிப்பது என்பது சற்று குறைவாக இருக்கும். அப்பொழுது, பொதுப் பிரச்சினைகள் அடிப்படையில் மட்டுமே அதிகளவு வாக்குகள் செலுத்தப்படும். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் என்பது வேறு, உள்ளாட்சித் தேர்தலில் அந்தப்பகுதியில் நிற்கும் வேட்பாளர்களை பொறுத்தே பொதுமக்கள் வாக்களிப்பார்கள்.  ஒரு வார்டில் இருவர் நிற்கிறார்கள் என்றால், இருவர் பற்றியும்  வாக்காளர்களுக்கு நேரடியாக தொடர்பு இருக்கும். நிச்சயம் ஏதோ ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். எனவே, நோட்டா இருப்பதும் ஒன்றுதான், இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்” எனத் தெரிவித்தார்.
 
மக்களின் அடிப்படை உரிமை
 
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி கூறுகையில், “நோட்டா என்பது அடிப்படை உரிமை,  வாக்காளர்கள் எவ்வாறு ஜனநாயக முறையில் எப்படி ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்களோ, அதே உரிமை வேட்பாளர்களை பிடிக்கவில்லை என வாக்களிக்க பொது மக்களுக்கு உரிமை உள்ளது. இந்த நகராட்சியில், இந்த வார்டில் உள்ள எந்த வேட்பாளர்களையும்  பிடிக்கவில்லை என வாக்களிக்க வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல் நோட்டா அதிகளவு வாக்குகளை பெற்றால், மறு தேர்தல் நடத்துவதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும்” என தெரிவித்தார்.
 
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநில குழு உறுப்பினர் எஸ். கண்ணன் கூறுகையில், “எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை ரகசியமாக நோட்டாவிற்கு வாக்களிக்கும் உரிமை பொது மக்களுக்கு உள்ளது . எனவே மாநில தேர்தல் ஆணையம் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்” என தெரிவித்தார்.
 
ஜனநாயகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை போலவே வேட்பாளரை பிடிக்கவில்லை என்றால், தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க இருக்கும் ஒரே ஆயுதம் நோட்டா தான். இந்த நோட்டா உள்ளாட்சித் தேர்தலிலும் இன்றியமையாதது தான்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget