மேலும் அறிய

மழை குறைந்த பின்னும் நிரம்பும் ஏரிகள்..! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் தற்போதைய நிலவரம்..!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 300 ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. பாலாறு படுகைக்கு கீழ் வரும் ஏரிகளில் 263 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ஏரிகள் நிறைந்த மாவட்டங்களாக இருந்து வருகிறது. பாலாறு படுகைக்கு கீழ் வரும் ஏரிகள் காரணமாக அதிக அளவு விவசாயமும், காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் நிரம்பும் ஏரிகளை நம்பிதான், காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். அதேபோல காஞ்சிபுரம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த குடிநீர் ஆதாரமாகவும் சில ஏரிகள் இருந்து வருகின்றன. 

மழை குறைந்த பின்னும் நிரம்பும் ஏரிகள்..! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் தற்போதைய நிலவரம்..!
 
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த பிரதான ஏரிகள்
 
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி, தென்னேரி, உத்திரமேரூர் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, எடமிச்சி ஏரி, தாமல் ஏரி  ஆகியவை உள்ளன. 
 
வடகிழக்கு பருவமழை
 
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையில் நீடிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை குறைந்த பின்னும் நிரம்பும் ஏரிகள்..! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் தற்போதைய நிலவரம்..!
 
கடந்த ஓராண்டு மேலாக அவ்வப்பொழுது மழை பெய்து வந்ததால், ஏரிகள் முழுமையாக வற்றாமல் இருந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 263 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
 
பாலாறு படுகை ஏரிகள்
 
காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சுமார் 1022 ஏரிகள் உள்ளன. அவற்றில் 300 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 88 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 175 ஏரி, சென்னையை மாவட்டத்தை சேர்ந்த 3 ஏரி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 34 ஏரிகள் ஆகியவை முழு (100 சதவீத கொள்ளளவு) கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
மழை குறைந்த பின்னும் நிரம்பும் ஏரிகள்..! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் தற்போதைய நிலவரம்..!
 
76% - 99%  கொள்ளளவை எட்டிய ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 182 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில்  30 ஏரிகள், சுமார் 76% சதவீதத்திலிருந்து 99% சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.

மழை குறைந்த பின்னும் நிரம்பும் ஏரிகள்..! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் தற்போதைய நிலவரம்..!
 
51%- 75% கொள்ளளவை எட்டிய ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 135 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 109 ஏரிகள், திருவண்ணாமலையில் 13 ஏரிகள்,  75 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.
 
26%- 50% கொள்ளளவை எட்டிய ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 119 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 62 ஏரிகள்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஏரி ,26%- 50% கொள்ளளவை எட்டியுள்ளது.
 
25 சதவீதத்திற்கும் கீழ் உள்ள ஏரிகள்
 
அனைத்து ஏரிகளும் 25 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருவதால், கால்வாய்களில் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியிருப்பதால், விரைவாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்னும் பல ஏரிகள் நிரம்பும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Ma.Su: தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ சீட்டுகள் பறிபோகுதா? அமைச்சர் தகவலால் அதிர்ச்சி...
தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ சீட்டுகள் பறிபோகுதா? அமைச்சர் தகவலால் அதிர்ச்சி...
TN Govt. New Rules: என்னது, இரவு நேரத்தில் ஹாரன் அடிக்கக் கூடாது, பட்டாசும் வெடிக்கக் கூடாதா.? அரசு புதிய உத்தரவு...
என்னது, இரவு நேரத்தில் ஹாரன் அடிக்கக் கூடாது, பட்டாசும் வெடிக்கக் கூடாதா.? அரசு புதிய உத்தரவு...
முரட்டு சத்தம்…! கதிகலங்க வைக்கும் கர்ஜனைகள்! – ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் 2 புலிகள்! வைரலாகும் வீடியோ
முரட்டு சத்தம்…! கதிகலங்க வைக்கும் கர்ஜனைகள்! – ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் 2 புலிகள்! வைரலாகும் வீடியோ
US Plane Crash: அச்சச்சோ..! நடுவானில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் வீடியோ, 64 உயிர்கள்?
US Plane Crash: அச்சச்சோ..! நடுவானில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் வீடியோ, 64 உயிர்கள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Aadhav Arjuna: 2026-க்கு பக்கா ஸ்கெட்ச்.. விஜயுடன் ஆதவ் அர்ஜூனா! ப்ளான் என்ன?TVK Vijay Order : ”பணம் இருந்தா பதவியா?” குமுறிய TVK நிர்வாகிகள்! விஜய் போட்ட Order!Edappadi Palanisamy: OPERATION செந்தில் பாலாஜி  ஆட்டத்தை ஆரம்பித்த EPS  ஆதவ் MASTERMINDUpanishad Ganga Series | உபநிஷத் கங்கா தொடர் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி அண்ணாமலை பங்கேற்பு | Annamalai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ma.Su: தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ சீட்டுகள் பறிபோகுதா? அமைச்சர் தகவலால் அதிர்ச்சி...
தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ சீட்டுகள் பறிபோகுதா? அமைச்சர் தகவலால் அதிர்ச்சி...
TN Govt. New Rules: என்னது, இரவு நேரத்தில் ஹாரன் அடிக்கக் கூடாது, பட்டாசும் வெடிக்கக் கூடாதா.? அரசு புதிய உத்தரவு...
என்னது, இரவு நேரத்தில் ஹாரன் அடிக்கக் கூடாது, பட்டாசும் வெடிக்கக் கூடாதா.? அரசு புதிய உத்தரவு...
முரட்டு சத்தம்…! கதிகலங்க வைக்கும் கர்ஜனைகள்! – ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் 2 புலிகள்! வைரலாகும் வீடியோ
முரட்டு சத்தம்…! கதிகலங்க வைக்கும் கர்ஜனைகள்! – ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் 2 புலிகள்! வைரலாகும் வீடியோ
US Plane Crash: அச்சச்சோ..! நடுவானில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் வீடியோ, 64 உயிர்கள்?
US Plane Crash: அச்சச்சோ..! நடுவானில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் வீடியோ, 64 உயிர்கள்?
பாலியல் வன்கொடுமை! ஆசிட் வீச்சு! பக்கத்து வீட்டுக்காரனால் குழந்தைகள் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடுமை!
பாலியல் வன்கொடுமை! ஆசிட் வீச்சு! பக்கத்து வீட்டுக்காரனால் குழந்தைகள் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடுமை!
PM Modi: ”மோடி ஒன்னும் செய்ய மாட்டாரு” அடித்து சொல்லும் மக்கள் - கஷ்டத்தில் தவிக்கும் இந்தியர்கள்...
PM Modi: ”மோடி ஒன்னும் செய்ய மாட்டாரு” அடித்து சொல்லும் மக்கள் - கஷ்டத்தில் தவிக்கும் இந்தியர்கள்...
“எனக்கு ரொம்ப வருத்தம்; மய்யத்தில் நான் காம்சோர்” – கமல் கட்சியில் இருந்து விலகும் முக்கிய நடிகை!
“எனக்கு ரொம்ப வருத்தம்; மய்யத்தில் நான் காம்சோர்” – கமல் கட்சியில் இருந்து விலகும் முக்கிய நடிகை!
தாயுடன் காதல் கொண்ட நபர் – குடலை உருவிய சகோதரர்கள் – சினிமாபோல் அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்
தாயுடன் காதல் கொண்ட நபர் – குடலை உருவிய சகோதரர்கள் – சினிமாபோல் அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்
Embed widget