பாலியல் வன்கொடுமை! ஆசிட் வீச்சு! பக்கத்து வீட்டுக்காரனால் குழந்தைகள் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடுமை!
பாதிக்கப்பட்டவரின் மூத்த குழந்தையான ஆறு வயது சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அசாமில் பக்கத்து வீட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவளுடைய இரண்டு குழந்தைகள் கண் முன்னே அவள் மீது ஆசிட் ஊற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த ஜனவரி 22 ஆம் தேதி இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது.
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையே வாய் தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து 30 வயது பெண் ஒருவர் பக்கத்து வீட்டுகாரர்களை சரமாரியாக சாடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டு 28 வயது நபர் அந்த பெண்ணின் கணவர் இல்லாத போது வீட்டில் நுழைந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் இரண்டு குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர்.
உடனே அந்த பெண் அந்த நபரை வெளியேறும்படி கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவர் மீது ஆசிட்டையும் ஊற்றியுள்ளார். இதைப்பார்த்த குழந்தைகள் செய்வதறியாது கதறியுள்ளனர். மேலும் அந்த பெண்ணுக்கு குற்றம் சாட்டப்பட்ட நபர் மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
வெளியே சென்றிருந்த கணவன் வீட்டிற்கு வந்தபோது அந்த பெண்ணின் கைகள், கால்கள், வாய் கட்டப்பட்டிருந்தன. மேலும் ஆசிட் பட்ட இடங்களில் படுகாயம் அடைந்திருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். மேலும் இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்தார்.
புகாரில் குற்றம் சாட்டப்பட்ட நபர் என் மனைவியை சித்ரவதை செய்துள்ளார். இதை என் குழந்தைகள் பார்த்துள்ளனர். அவன் ஏற்கெனவே நிறைய பெண்களிடம் ஆபாசமாக நடந்துள்ளான். இதனால் ஊர் பஞ்சாயத்து கூட்டியும் பேசியுள்ளனர்.
என் மனையிடமும் தொலைபேசி எண்களை கேட்டு அவள் தர மறுக்கவே மிரட்டி சென்றுள்ளான்.
மனைவிக்கு இவ்வாறு நடந்ததும் அவளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல சொன்னார்கள். நாங்கள் போலீசிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
மேலும் கணவரின் புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவரைத் தேடி வருகிறோம். அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருக்கிறோம்.
பாதிக்கப்பட்டவரின் மூத்த குழந்தையான ஆறு வயது சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு நாங்கள் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்வோம்” எனத் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

