மேலும் அறிய

வடிகாலில் கொசுவலை சர்ச்சை ; விளக்கம் கொடுத்த மேயர் பிரியா !! காரணம் என்ன ?

வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் என்பது மாநகராட்சி அறிவிப்பால் செய்யப்பட்டது இல்லை , மாமன்ற உறுப்பினர் அறிவுறுத்தல் பேரில் செய்திருக்கிறார்கள் - மேயர் பிரியா

ஆடுதொட்டி கட்டுமான பணிகள் ஆய்வு

சென்னை புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ சார்பில் கட்டப்பட்டு வரும் ஆடுதொட்டி புச்சர் கிரவுண்ட் கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா ; 

கடந்த 125 ஆண்டுகளாக ஆடுதொட்டி பயன்பாட்டில் இருந்து வருகிறது. சென்னை மாநகராட்சி முழுவதும் இங்கிருந்து வாங்கி சென்று சில்லறை விற்பனை கூடங்களில் விற்கும் அளவிற்கு பெரிய அளவிலான ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி கூடமாக செயல்பட்டு வந்தது. 

முதலமைச்சர் ஆணைப்படி சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணைந்து இந்த ஸ்மார்ட் ஹவுஸ் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இங்கு இருந்த ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி கடைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அவர்களின் பயன்பாட்டிற்கே திறந்து வைக்கப்பட உள்ளது. ஒட்டு மொத்தமாக 53 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 

பிப்ரவரி மாதத்திற்குள் பொதுமக்கள் பணிக்கு முழுவதும் கொண்டு வரும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இங்கு வரும் கழிவுகள் மூலம் ஏற்படும் துர்நாற்றத்தால் முன்பு இங்கு வசிக்கக் கூடிய மக்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. அது தற்பொழுது நவீன தொழில் நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்து மழைநீர் வடிகால் மூலம் வெளியேற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆட்டு இறைச்சி சில்லறை விற்பனையாளர்கள் இந்த பகுதியில் கடை ஒதுக்க மனு அளித்தது குறித்த கேள்விக்கு ; 

இது முற்றிலும் ஆட்டு இறைச்சி மாட்டு இறைச்சி வெட்டப்பட்டு , வெளியில் எடுத்து சென்று தான் சில்லறை வியாபாரம் செய்யப்படுகிறது. இங்கு சில்லரை வியாபாரிகள் கடைகள் வைக்க இடம் கிடையாது. சென்னையில் புளியந்தோப்பு மற்றும் சைதாப்பேட்டை பகுதியில் இடங்களில் உள்ளது. இந்த பகுதியில் முற்றிலும் ஆடுகளை வெட்டி வெளியில் கொண்டு போய் விற்பனை செய்வதற்கு தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வடிகால் பகுதியில் கொசு வலை மாநகராட்சி ஊழியர்கள் வைப்பது போன்ற காணொளி வெளியானது குறித்த கேள்விக்கு ; 

மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்பட்ட விஷயம் இது கிடையாது. அது கொசுக்களுக்காக போடப்பட்டது இல்லை. மாமன்ற உறுப்பினர் கொடுத்த யோசனை பேரில் செய்திருக்கிறார்கள் இது அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை என்றார்.

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Property Tax: சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget