நாளைக்கு சட்டமன்றத்தில் இதை பற்றி பேசுகிறேன் - அமைச்சர் எ.வ. வேலூ
தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு குறித்தான கேள்விக்கு , நாளைக்கு சட்டமன்ற இருக்கு அங்க பேசுகிறேன் எனவும் எனக்கு நாளைக்கே துறை மீதான மானியம் இருக்கு நான் பேசுகிறேன் எனவும் தெரிவித்தார்.

சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் நகரில் கடந்த மாதம் பிப்ரவரி 27 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அரசு மருத்துவமனையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். உடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.
கொளத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு தரமான உயர் மருத்துவ சிகிச்சைகளை வழங்க பெரியார் நகரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி தரை மற்றும் 3 தளங்களுடன் கூடிய புதிய மருத்துவமனையைக் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. அதனை அடுத்து மேலும் சில சிறப்பு சிகிச்சைகளை வழங்குவதற்கான கூடுதலாக 3 தளங்களுடன் விரிவாக்கம் செய்ய கடந்தாண்டு மார்ச் 7 ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 6 தளங்களோடு பல்வேறு புதிய உயர் சிகிச்சை வசதிகளுடன் 210.80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு இந்த மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என பெயர் சூட்டி கடந்த மாதம் பிப்ரவரி 27 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும், மருத்துவமனைை செயல்பாடுகளையும் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
பெரியார் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் உங்களை நல்லா பார்த்துக் கொள்கிறார்களா எனவும் மூன்று வேலையும் உணவு சரியாக வருகிறாதா எனவும் சரியாக வார்டுகளை தூய்மை பணிகளை மேற்கொள்கிறார்களா எனவும் அமைச்சர் எ.வ.வேலு கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவமனை ஆய்வகங்கள் மற்றும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வார்டுகளுக்கும் சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு;
கொளத்தூர் பெரியார் நகரில் அமைந்துள்ள பெரியார் மருத்துவமனை முதலமைச்சர் திறந்து வைத்த மறு தினமே மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பொதுப்பணித்துறை சார்பாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கிறது. உரிய நேரத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறதா பொறியாளர்கள் வருகிறார்களா என ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சேகர்பாபு உடன் இணைந்து ஆய்விற்கு வந்துள்ளோம்.
மருத்துவமனைக்கு அரசு விடுமுறை நாள் கிடையாது. சிறப்பு மருத்துவமனையில் 560 படுக்கைகளை கொண்ட மருத்துவமனை உள்ளது. பழைய கட்டிடத்தில் 300 படுக்கைகள் உள்ளது என மொத்தமாக 870 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
புதிய மருத்துவமனையில் 25க்கு மேற்பட்ட மருத்துவ துறைகள் செயல்பட்டு வருகிறது. நியூராலஜி, ஆர்த்தோ, கார்டியாலஜி சிறப்பு துறைகளில் சோதனைகளும் பரிசோதனைகளும் நடைபெற்று வருகிறது. ஒரு நாளில் 125க்கும் மேற்பட்ட நோயாளிகள் மார்பக பிரச்சினைகள் வருகிறார்கள் என தெரிவித்தார்.
மொத்தமாக 639 பேர் பணியாற்றி வருகிறார்கள். அதில் 90% பேர் பணியில் உள்ளார்கள். மீதமுள்ள 10 சதவீதம் வந்து கொண்டிருக்கிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மருத்துவமனையில் ஏற்கனவே நான்கு ஆபரேஷன் தியேட்டர் உள்ளது. இந்த கட்டிடத்தில் மேலும் ஆறு ஆப்ரேஷன் தியேட்டர் உள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவனைகளிலே 9 ஆபரேஷன் தியேட்டர் தான் உள்ளது. ஆனால் மருத்துவக் கல்லூரியில் இல்லாத மருத்துவமனையில் 10 ஆபரேஷன் தியேட்டர் உள்ளது என தெரிவித்தார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரே ஆப்ரேஷன் தியேட்டர் உள்ளது. கிட்னி எடுப்பது கிட்னி பொருத்த என இரண்டுக்கும் ஒரே ஆபரேஷன் தியேட்டர் உள்ளது. வட பகுதியில் உள்ள மக்கள் மருத்துவம் பார்ப்பதற்காக இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என் துறை சார்பாக சில நேரம் அவரே ஆய்வுகளை நடத்திக் கொள்கிறார் என கூறினார்.
மருத்துவமனைக்கு பிறகு மன நிறைவோடு இருக்கிறேன். மருத்துவர்கள் இணைவது மற்றும் ஒரு சில சுற்றுப்புறங்களை இன்னும் சீர் செய்ய வேண்டும் துறையின் சார்பாக சொல்லி இருக்கிறேன். அடுத்த வாரத்தில் 100% பணிகள் சிறப்பாக இருக்கும் எனவும் 97 சதவீதம் தான் நானே சொல்லுவேன் எனவும் மருத்துவமனை சுத்தமாக உள்ளது கார்ப்பரேட் அலுவலகத்தை மிஞ்சும் அளவிற்கு உள்ளது.
பெரியார் பெயரில் அமைந்துள்ள மருத்துவமனை கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரான முதலமைச்சர் பார்த்து பார்த்து கட்டி உள்ளார். நேரடியாக வார்டு சென்று நோயாளிகளிடம் கேட்டபோது முகம் பூரித்து சிறப்பாக பார்த்துக் கொள்கிறார்கள் எனவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவி்க்க வேண்டும் என என்னிடம் சொல்லி உள்ளார்கள். முதலமைச்சர்கள் தொகுதி மக்கள் உங்களுக்கு நன்றி சொன்னார்கள் என தெரிவிக்க உள்ளேன் என தெரிவித்தார்.
தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு குறித்தான கேள்விக்கு
நாளைக்கு சட்டமன்றம் இருக்கு அங்கு பேசுகிறேன் எனவும் எனக்கு நாளைக்கே துறை மீதான மானியம் இருக்கு நான் பேசுகிறேன் எனவும் தெரிவித்தார்.

