மேலும் அறிய
Advertisement
புளியந்தோப்பில் சுவர் இடிந்து பெண் உயிரிழப்பு - குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய அமைச்சர்கள்
சென்னை புளியந்தோப்பு பிரகாஷ் ராவ் காலனியில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர் பாபு ஆகியோர் நிவாரண உதவி தொகையை வழங்கினர்.
சென்னை புளியந்தோப்பு பிரகாஷ் ராவ் காலனியில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர் பாபு ஆகியோர் நிவாரண உதவி தொகையை வழங்கினர்.
தமிழ்நாடு அரசு சார்பாக ரூபாய் 4 லட்சம் காசோலையும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக ரூபாய் 1 லட்சம் பணமும் உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகளிடம் வழங்கப்பட்டது. மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் உடனிருந்தனர்.
ஒரு மகன் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை எனவும் இந்த நேரத்தில் இந்த நிவாரண தொகையை வழங்கியது உதவியாக இருக்கும் எனவும் மேலும் தனது மகனுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் எனவும் இறந்த பெண்ணின் கணவர் கபாலி கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, அரசு சார்பாக ரூபாய் 4 லட்சமும் திமுக சார்பாக ரூபாய் 1 லட்சம் பணமும் வழங்கப்பட்டது எனவும் இறந்த பெண்ணின் குடும்பத்தில் கல்வி தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
விழுப்புரம்
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion