மேலும் அறிய

செல்போனும் சுவிட்ச் ஆஃப்...... தலைமறைவாகிய சர்ச்சை நடிகை மீரா மிதுன்...!

நடிகை மீரா மிதுன் தொடர்ந்து மாயமாகி உள்ளார். அவர் பயன்படுத்திய செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தினரை கண்காணித்து வருகிறோம் - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிப்பு

நடிகை மீரா மிதுன் தொடர்ந்து மாயமாகி உள்ளதாக காவல் துறை தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மற்தும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை துவங்க இருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீராமிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க முயற்சித்து வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மீராமிதுன் தொடர்ந்து மாயமாக உள்ளதாகவும், அவர் பயன்படுத்திய ஒரு மொபைலும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர்  எங்கிருக்கிறார் என தெரியவில்லை எனவும், அவரது  குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 16ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 
மற்றொரு வழக்கு
 
கடன் மோசடி வழக்கில் சிபிஐ-யால் குற்றம்சாட்டப்படாவிட்டாலும், மோசடி பணத்தின் மூலம் சொத்துக்கள் வாங்கியவருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
 
கடந்த 2008-ம் ஆண்டு குளோபல் டிரேட் பைனான்ஸ் என்கிற தனியார் நிதி நிறுவனத்தில், போலி ஆவணங்களைக் கொடுத்து 15 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக  ஜி.சீனிவாசன், ஆர்.மனோகரன் மற்றும் வங்கி மேலாளர் எஸ்.அறிவரசு உள்ளிட்ட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
 
இந்த 15 கோடி ரூபாயை பயன்படுத்தி,  புதுக்கோட்டை என்ற கிராமத்தில் பி.வெங்கடாச்சலபதி, பி.ராஜேந்திரன் மற்றும் கே.விக்னேஷ் ஆகியோரது பெயர்களில் ஜி.சீனிவாசன் 166 ஏக்கர் நிலம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தி்ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.  
 
இந்நிலையில் தனக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்யாத நிலையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதை ரத்து செய்யக்கோரி பி.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில்,  மோசடியாக பெறப்பட்ட பணத்தின் மூலமாக மனுதாரர் பெயரில் சொத்து வாங்கப்பட்டுள்ளதால், அவர்  குற்றச்செயலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார் என்பதால்  அமலாக்கத்துறை  வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதில் எந்த விதிமீறலும் இல்லை, என வாதிடப்பட்டது.
 
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,  சிபிஐ தொடர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபராக இல்லை என்றாலும், குற்றத்தின் மூலமாக பெறப்பட்ட தொகையில் மனுதாரர் பெயரில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதால், அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது சட்டவிரோதம் அல்ல, எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
 
தலைப்பு செய்திகள்

கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
சொந்த நிலத்தில் வீடு கட்டப்போறீங்களா ? இந்த 4 ஒப்பந்த முறைகளை தெரிஞ்சுக்காம வேலையை தொடங்காதீங்க
சொந்த நிலத்தில் வீடு கட்டப்போறீங்களா ? இந்த 4 ஒப்பந்த முறைகளை தெரிஞ்சுக்காம வேலையை தொடங்காதீங்க
Chennai Port Outer Harbour Project: ₹17,700 கோடியில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரம்மாண்ட திட்டம்! சென்னையில் என்ன நடக்கப்போகிறது? முழு விவரம்!
₹17,700 கோடியில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரம்மாண்ட திட்டம்! சென்னையில் என்ன நடக்கப்போகிறது? முழு விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Embed widget