மேலும் அறிய

Singaravelu: இந்தியாவிலே தமிழ்நாட்டில் முதன்முதலாக கொண்டாடப்பட்ட மே தினம்; யார் இந்த சிங்கார வேலு

May Day in Tamil Nadu: பொதுவுடைமைவாதியான சிங்காரவேலு, இந்தியாவிலே முதல் முறையாக தமிழ்நாட்டில் மே தினம் கொண்டாடப்படுவதற்கு காரணமாக உள்ளார். 

முன்பு, உலக அளவில் எடுத்து கொண்டாலும் தொழிலாளர்கள் பல மணி நேரம் உழைத்தனர். இதனால், அவர்கள் சொந்த விசயங்களை கூட கவனிக்க முடியாத நிலை இருந்தது. சில இடங்களிகளில் 16 மணி நேரம் கூட வேலை இருந்ததாக வரலாற்று நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தொழிற்புரட்சி ஏற்பட்ட 18 ஆம் நூற்றாண்டுகளில் தொழிலாளர்களின் உழைப்பானது சுரண்டபட்டது என்றே சொல்லலாம்.

போராட்டங்கள்:

அவ்வப்போது சில இடங்களில் அங்கும் இங்குமாக தொழிலாளர்கள் உரிமை குறித்து போராட்டங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் போராட்டமானது பல இடங்களுக்கு பரவ ஆரம்பித்தது.  இங்கிலாந்து, ,அமெரிக்கா,பிரான்ஸ்  உள்ளிட்ட நாடுகளில் தொழிலாளர்களின் புரட்சி உத்வேகம் அடைய ஆரம்பித்தது.

1886ஆம் ஆண்டு அமெரிக்காவின் , சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அப்போராட்டத்தில் காவல்துறையினரால், தொழிலாளர்கள் பெரும் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்.

Singaravelu:  இந்தியாவிலே தமிழ்நாட்டில் முதன்முதலாக கொண்டாடப்பட்ட மே தினம்; யார் இந்த சிங்கார வேலு

image credits: @pixabay

மே 1 தீர்மானம்:

இதையடுத்து, 1889 ஆம் ஆண்டு பாரீசில் சர்வதேச தொழிலாளர் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 8 மணி நேர வேலை, மே 1 தேதி முதல் உலகளாவிய தொழிலாளர் தினம் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை 1923 ஆம் ஆண்டுதான் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. அதுவும் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக மே தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு காரணமானவராக திகழ்பவர் சிங்கார வேலர்தான்.

20 ஆம் நூற்றாண்டுகளில் தொடக்கத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதியான சிங்கார வேலர், தொழிலாளர்களின் பொருளாதாரம், பணி நேரம் உள்ளிட்ட உள்ளிட்ட கோரிக்கைகள், தொழிலாளர்களுக்கு உரிமைகளாக மாற வேண்டும் என அவ்வப்போது, சென்னை மாகாணத்தில் தொழிளார்களை திரட்டி போராட்டம் நடத்தி வந்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியானது சிங்காரவேலர், சுவாமி தீனாநாத், சி.எஃப். ஆண்ட்ரூஸ், எஸ்.என்.ஹால்டர், டாக்டர் டி.டி.சத்யா, ஜே.எம்.சென் குப்தா ஆகிய 6 பேர் கொண்ட AITUC என்ற தொழிலாளர்களுக்கான அமைப்பை ஏற்படுத்தியது .  

லேபர் கிசான் கட்சி:

அயல்நாடுகளில் மே தினம் கொண்டாடப்படுவது போல, இந்தியாவிலும் மே தினம கொண்டாடப்பட வேண்டும் என் சிங்கார வேலர் தெரிவித்தார். இதையடுத்து, 1923 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரை கூட்டத்தில் சிங்காரவேலர் தலைமையேற்று விழாவை நடத்தினார். லேபர் கிசான் கட்சி என்கிற புதிய கட்சி தொடங்கினார்.  இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் சுதந்திர போராட்ட தலைவராக பார்க்கப்பட்ட சிங்கார வேலர் , தனித்துவமிக்க தலைவராகவும் பார்க்கப்பட்டார்.

கட்சியின் அறிவிப்பை வெளியிட்டு, தங்கள் கட்சியின் கொள்கை குறித்தும் தொழிலாளர்கள் நலன் குறித்து உரையாற்றினார். மேலும் இந்த கட்சியானது,  காங்கிரஸ் கட்சியின் கிளை அமைப்பாகவே லேபர் கிசான் கட்சி செயல்படும் என்றும் தெரிவித்தார்.

Singaravelu:  இந்தியாவிலே தமிழ்நாட்டில் முதன்முதலாக கொண்டாடப்பட்ட மே தினம்; யார் இந்த சிங்கார வேலு

மே தினம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இது  தொடர்பாக, கல்கத்தாவுக்கு தந்தி ஒன்றும் அனுப்பப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது, 'சென்னையில், சிங்காரவேலு தலைமையில் மே தினத்தில் லேபர் கிசான் கட்சி தொடங்கப்பட்டது.. மே தினத்தை விடுமுறையாக அறிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. தொழிலாளர் விடுதலைக்கு உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை தேவை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து , இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மே தினம் கொண்டாடப்படும் முறையை நடைமுறைக்கு வர ஆரம்பித்தது.

இந்தியாவிலேயே , தமிழ்நாட்டில்தான் மேதினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலே மேதினம் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் சிங்கார வேலர் என்றால் மிகையில்லை.

Also Read: Grama Sabha Meeting: மக்களே... உழைப்பாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம் - தமிழக அரசு அறிவிப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விழாக்கோலத்தில் காஞ்சிபுரம்..! சிம்ம வாகனத்தில் வரதர்: முழக்கமிட்ட பக்தர்கள்..
விழாக்கோலத்தில் காஞ்சிபுரம்..! சிம்ம வாகனத்தில் வரதர்: முழக்கமிட்ட பக்தர்கள்..
Breaking News LIVE: பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு!
Breaking News LIVE: பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு!
அதை நினைச்சாதான் வருத்தமா இருக்கு.. மகள் அருணாவை நினைத்து கலங்கிய ராமராஜன்
அதை நினைச்சாதான் வருத்தமா இருக்கு.. மகள் அருணாவை நினைத்து கலங்கிய ராமராஜன்
Dengu Fever: டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை செல்லுங்கள் - பொது சுகாதாரத்துறை இயக்குனர்
டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை செல்லுங்கள் - பொது சுகாதாரத்துறை இயக்குனர்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Odisha VK Pandian | தமிழர் மீது வெறுப்பை கக்கிய மோடி! பாஜக vs பிஜு ஜனதா தளம்BJP cadre false complaint : பொய் சொன்ன பாஜக பிரமுகர்! உண்மையை உடைத்த கொள்ளையன்! ஆத்திரத்தில் POLICEVeeralakshmi on Vijay Dhanush : ”விஜய், தனுஷ், த்ரிஷா..உடனே டெஸ்ட் எடுங்க”வீரலட்சுமி பரபரப்பு புகார்Akshay kumar first vote : 56 வயதான அக்‌ஷய் குமார்! முதல்முறையாக வாக்களித்தார் காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விழாக்கோலத்தில் காஞ்சிபுரம்..! சிம்ம வாகனத்தில் வரதர்: முழக்கமிட்ட பக்தர்கள்..
விழாக்கோலத்தில் காஞ்சிபுரம்..! சிம்ம வாகனத்தில் வரதர்: முழக்கமிட்ட பக்தர்கள்..
Breaking News LIVE: பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு!
Breaking News LIVE: பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு!
அதை நினைச்சாதான் வருத்தமா இருக்கு.. மகள் அருணாவை நினைத்து கலங்கிய ராமராஜன்
அதை நினைச்சாதான் வருத்தமா இருக்கு.. மகள் அருணாவை நினைத்து கலங்கிய ராமராஜன்
Dengu Fever: டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை செல்லுங்கள் - பொது சுகாதாரத்துறை இயக்குனர்
டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை செல்லுங்கள் - பொது சுகாதாரத்துறை இயக்குனர்
IPL 2024 Playoffs: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எலிமினேட்டரும்.. ராசியில்லா சுற்றில் களமிறங்கும் ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எலிமினேட்டரும்.. ராசியில்லா சுற்றில் களமிறங்கும் ஆர்சிபி!
Rajiv Gandhi Death Anniversary: 33வது நினைவு தினம்..! அப்பா ராஜிவ் காந்தி குறித்து ராகுல் நெகிழ்ச்சி
Rajiv Gandhi Death Anniversary: 33வது நினைவு தினம்..! அப்பா ராஜிவ் காந்தி குறித்து ராகுல் நெகிழ்ச்சி
Vairamuthu: திருமணம் என்றதும் பெண்கள் பயப்படுகிறார்கள்.. வைரமுத்து சொன்னது என்ன?
திருமணம் என்றதும் பெண்கள் பயப்படுகிறார்கள்.. வைரமுத்து சொன்னது என்ன?
HBD Abbas : சாக்லேட் பாய் டூ பைக் மெக்கானிக்.. அப்பாஸுக்கு பிறந்தநாள்..
HBD Abbas : சாக்லேட் பாய் டூ பைக் மெக்கானிக்.. அப்பாஸுக்கு பிறந்தநாள்..
Embed widget