மேலும் அறிய

தனியாக செல்லும் சிறுவர்களை குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர்

சிறுவர்களிடம் நைசாக பேசி கடத்தி , பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்று வட்டார பகுதியில் இரவு டியூசன் முடிந்து வீடு செல்ல தனிமையில் பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் சிறுவர்களை குறி வைத்து நைசாக பேசி அழைத்து இருசக்கர வாகனத்தில் கடத்தி செல்லும் மர்ம நபர்கள் சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதாக புகார்கள் எழுந்தது

பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவர்களின் எதிர்கால நலன் கருதி போலீஸாரிடம் புகாரளிக்காமல் தகவல் தெரிவித்து வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு டியூசன் முடிந்து சொந்த ஊரான திங்கள் சந்தை பகுதிக்கு செல்ல குளச்சல் வி.கே.பி பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்து நின்ற சிறுவனை மர்ம நபர் ஒருவர் நைசாக பேசி இருசக்கர வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்று ஆள் நடமாட்டமில்லாத கடற்கரை பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்

மர்ம நபரின் பிடியில் இருந்து தப்பிய திங்கள் சந்தை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதான அந்த சிறுவன் சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் பெற்றோர் தைரியமாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதனையடுத்து சிறுவனிடம் மர்ம நபரின் அடையாளங்களை கேட்டறிந்த போலீஸார் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அடுத்தடுத்த சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில் மர்ம நபர் கொண்டு வந்த பைக்கை அடையாளம் கண்டு பைக்கின் உரிமையாளரான பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தை சேர்ந்த 39 வயது மீன்பிடி தொழிலாளியான அருள் ஆன்றோ சஜின் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

கழுத்தை நெரித்து கொடுமை

விசாரணையில் குளச்சல் பகுதியில் பேருந்துக்காக காத்து நின்ற அந்த சிறுவனிடம் நைசாக பேசி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிய மீன்பிடி தொழிலாளியான அருள் ஆன்றோ சஜின் சிறுவனை இரவு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத கூட்டுமங்கலம் கடற்கரை பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் ஒத்துழைக்காத சிறுவனை கழுத்தை நெரித்து கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் அதன் பின் சிறுவன் அருள் ஆன்றோ சஜின் பிடியில் இருந்து தப்பியோடியதும் தெரிய வந்தது.

மேலும் 5 க்கும் மேற்பட்ட சிறுவர்களை இதுபோன்று அழைத்து கடத்தி சென்று அதே பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ள அருள் ஆன்றோ சஜினுக்கு கோட்டார் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்னது அவரிடம் இருந்த பணத்தையும் பறித்து சென்றதாக வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த அருள் ஆன்றோ சஜின் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் மகளிர் போலீஸார் அருள் ஆன்றோ சஜினை கைது செய்து சிறையிலடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
NOC தேவையில்லை !! புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவது எப்படி ? TNEB புதிய உத்தரவு
NOC தேவையில்லை !! புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவது எப்படி ? TNEB புதிய உத்தரவு
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget