மேலும் அறிய
Advertisement
சென்னை : பாடியில் லோடு வண்டி மோதி பலியான இருசக்கர வாகன ஓட்டி
சென்னை பாடி லூகாஸ் மேம்பாலம் அருகே கொரட்டூர் நோக்கி சென்ற லோடு வண்டி கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகன ஓட்டி பலியானார்
மாவட்ட நெடுஞ்சாலையில் பொதுமக்கள் அதிகம் சாலையைக் கடக்கும் இடங்களில் வேகத்தடை இல்லாததால் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறும் அவலம்.
சென்னை பாடி லூகாஸ் மேம்பாலம் அருகே கொரட்டூர் நோக்கி சென்ற லோடு வண்டி கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகன ஓட்டி
பலியானார்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மேத்யூ இவர் இன்று காலை ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வில்லிவாக்கத்திலிருந்து லூகாஸ் பாடி மேம்பாலம் வழியாக அம்பத்தூர் சென்றுகொண்டிருந்த போது பாடி சரவணா ஸ்டோர் எதிரே பிரதான சாலை நடுவே மேத்யூ ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை பின்பகுதியில் அதிவகமாக வந்த லோடு லாரி இருசக்கர வாகனத்தை இடித்தது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்படுவதில் மேத்யூ பலியானார்.
இருசக்கர வாகனத்தில் சென்ற மேத்யூ தலைகவசம் அணிந்திருந்தும் கிளிப் போடாததால் சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் உடலை கைப்பற்றி அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்த நிலையில் போக்குவரத்து போனாவி போலீசார் நடந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லோடு வண்டியின் ஓட்டுநர் சரத்குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சென்னையில் இருந்து அம்பத்தூர் வழியாக திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் செல்லக்கூடிய இந்த மாவட்ட நெடுஞ்சாலையில் முறையாக அறிவிப்பு பலகைகள் மற்றும் வேகத்தடைகள் இல்லாதது இது போன்ற தொடர் விபத்து காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
அம்பத்தூர் : மதுபோதையில் ஐ.டி ஊழியரை தாக்கிய 3 பேர் கைது
அம்பத்தூரில் இரவு பணிக்கு செல்ல காத்திருந்த IT பெண் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா ஹோட்டல் அருகே சாலையோர டீ கடையில் இரவு பணிக்கு செல்ல காத்திருந்த ஐ.டி பெண் ஊழியர்கள் மோனிஷ் மற்றும் பீணா. இவர்கள் சென்னை போரூரில் உள்ள DLF IT நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வழக்கம் போல் இரவு வேலைக்கு செல்ல் CAB ற்காக நின்று கொண்டிருந்த பொழுது அங்கு ஹூண்டாய் i20 காரில் வந்த போதை ஆசாமிகள் 3 பேர் மோனிஷா மற்றும் பீணா விடம் வீண் தகராறு செய்து வீணாவின் கையில் இருந்த 25,000 ரூபாய் மதிப்புள்ள Vivo செல்போனை கேட்டு கையால் அடித்து செல்போனை பறித்து கீழே போட்டு உடைத்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாக வீணா 100 காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர் பிரபாகரனிடம் நடந்ததை கூறிய நிலையில் சம்பவ இடத்தில் அருகே உள்ள டீக்கடையில் புகை பிடித்துக்கொண்டிருந்த 3 பேரும் தாகவும் காவலர் பிரபாகரன் விசாரணை நடத்தினார். அப்பொழுது போதை ஆசாமிகள் 3 பேரும் சேர்ந்து காவலர் பிரபாகரனை கையால் அடித்தும் போட்டோ எடுக்க முயன்ற அவரது செல்போனை கீழே போட்டு உடைத்ததாக காவலர் திரு பிரபாகரன் கொடுத்த தனி அறிக்கையின் பேரில் சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த ஜூம் கார் டெலிவரி பாய் பிரபு வ/29 ,சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் PRO சூர்யா வ/24மற்றும் ஊரப்பாக்கத்தை சேர்ந்த முகில் செருப்பு கடை உரிமையாளர் சிவகுமார் வ/43 ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்து மேற்கண்ட வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
விழுப்புரம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion