மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட பெண்கள்.. அதிகாரியை கண்டித்த சட்டமன்ற உறுப்பினர்.. என்ன நடந்தது?
Kanchipuram MLA : " உடனடியாக கிராம நிர்வாக அலுவலரை வரவைத்து அனைவருக்கும் மறு ஆய்வு செய்யக்கோரி உத்தரவிட்டார் "
புதிய நியாய விலை கட்டிடத்தை திறக்க சென்ற சட்டமன்ற உறுப்பினரை மகளிர் உரிமை தொகை ரூ.1000 கிடைக்கவில்லை என கிராம மக்கள் முற்றுகையிட்டனர். வயதான மூதாட்டி எனக்கு வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக குறுஞ்செய்தி வந்தால் எனக்கு உரிமை தொகை நிராகரிப்பு என புகார் வந்ததால் அதிகாரியை கடுமையாக கண்டித்த சட்டமன்ற உறுப்பினர்...
புதிய நியாய விலை கடை திறப்பு விழா
காஞ்சிபுரம் ( NewKanchipuram s ) : காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்கதிர்பூர், மேல்கதிதிர்பூர், மேல்ஒட்டிவாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் புதிய நியாய விலை கடை, புதிய அங்கன்வாடி மையம், புதிய தார் சாலை அமைத்தல், பள்ளிகளுக்கு சுகாதார நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை திறப்பு விழாவிற்காக வருகை தந்திருந்தார். இந்நிலையில் கீழ்கதிர்பூர் கிராமத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு விழாவிற்காக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் வருகை தந்து கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மகளிர் உரிமை தொகை திட்டம்
கீழ்கதீர்பூர் பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் மற்றும் 100 நாள் வேலை பணியாற்றும் கிராம மக்கள் 50க்கும் ஒன்றுகூடி சட்ட மன்ற உறுப்பினர் எழிலரசனை முற்றுகையிட்டு எங்களுக்கு ஏன் மகளிர் உரிமை தொகை திட்டம் மாதம் ரூ.1000 கிடைக்கவில்லை என தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக தெரிவித்து அனைவரும் ஒன்று கூடி பணம் கிடைக்கவில்லை என கூச்சலிட்டனர்.
மோடியை ஏன் போய் கேட்கவில்லை
சட்டென்று கோபம் அடைந்த சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், பத்தாண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி ஏமற்றினார்களே.. மோடியை ஏன் போய்கேட்கவில்லை... அவரிடம் போய் கேட்க வேண்டியதுதானே என கோபித்துக் கொண்டார், உடனே கூட்டத்திலிருந்து பெண்மணி ஒருவர் மோடி அவர்களை வர சொல்லுங்க நான் அவரிடம் கேட்கிறோம். நீங்கள் தானே எங்களிடம் வந்திருக்கிறீர்கள் என கேட்டனர்.
அதன் பின் ஒருவரின் பின் ஒருவர் பெண்கள் ஒன்று கூடி கேட்டு வந்த நிலையில் அச்சமயம் வந்த கிராம நிர்வாக அலுவலர் வருகை தந்தார். அப்போது கூட்டத்திலிருந்து முதியவர் பெண்மணி எனக்கு வரவில்லை என கூறியதும் என்ன காரணம் என கேட்டதற்கு வருமானவரித்துறை தாக்கல் செய்துள்ளதாக குறுஞ்செய்தி வந்ததாக கூறினார்.
வருமான வரித்துறை கட்டுவது போல் உள்ளதா ?
உடனே கோபம் அடைந்த சட்டமன்ற உறுப்பினர் கிராம நிர்வாக அலுவலரிடம், இவர்களைப் பார்த்தால் வருமான வரி கட்டுவது போல் உள்ளதா ? ஏன் இதனை சரியாக ஆய்வு செய்ய மாட்டீர்கள் என உங்கள் மீது, நிர்வாக ரீதியாக பணியிட நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். அரசு அலுவலர்களுக்கு மாதம் தோறும் சம்பளம் சம்பாதித்தால் மட்டும் போதுமா, மக்கள் நலன் குறித்து அக்கறை வேண்டாமா, அரசு அலுவலர்கள் செய்யும் தவறால் மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்கமும் பொது மக்களிடம் பதில் கூறும் நிலையை ஏற்படுத்துவதா என சரமாரியாக அதிகாரிகளை கேள்வி கேட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion