மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
அரசுப்பள்ளி கழிவறையில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்த மாணவி.. நடந்தது என்ன?
செங்கல்பட்டு மதுராந்தகம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறையில் வழுக்கி விழுந்த மாணவி
செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1913 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் செய்யூர், மேல்மருவத்தூர் , அச்சரப்பாக்கம் , சூனாம்பேடு, படாளம், பவுஞ்சூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். நகர்ப்பகுதியில் அமைந்திருக்கும் பள்ளி என்பதால், பெற்றோர்கள் இந்த பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
1913 மாணவிகளுக்கு 17 கழிப்பறை..
மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதியில், பல்வேறு மேல்நிலைப் பள்ளிகள் இருந்தாலும், 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பில் அனைத்து பாடப்பிரிவுகளும் இந்த பள்ளியில் உள்ளதால், மாணவிகளின் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தப் பள்ளியில் முறையான குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் இல்லை என நீண்ட நாளாகவே, புகார் எழுந்த வண்ணம் இருந்தன. கிட்டத்தட்ட 2000 மாணவிகள் பயிலும் இந்த, பள்ளியில் 17 கழிவறைகள் மட்டுமே உள்ளன. 113 மாணவிகளுக்கு ஒரு கழிவறை மட்டுமே, உள்ள அவல நிலையில், இந்த அரசு பள்ளி இயங்கி வருகிறது.
கழிவறையில் வழுக்கி விழுந்து..
மதுராந்தகம் அடுத்த புது மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி 8 -ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை, கழிவறை சென்ற பொழுது கழிவறையில் வழுக்கி விழுந்துள்ளார். இதனால் கழிவறை 'பீங்கான்' உடைந்தது, இதில் மாணவியின் கால் சிக்கி பல்வேறு இடங்களில், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கழிவறையில் இருந்து மாணவி கூச்சலிட்டு உள்ளார். சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு, முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 21 தையல் போடப்பட்டுள்ளது. இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் வரை தேவைப்படும் என மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி யாருக்கும் இந்தநிலை ..
இது குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் மாணவிகள் தவித்து வருகின்றனர். நாங்களெல்லாம் தினக்கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். இவ்வளவு நாட்களுக்கு எப்படி, என் மகளை பார்த்துக் கொள்ளப் போகிறோம் என தெரியவில்லை. வறுமை காரணமாக தான் அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறோம். இனி யாருக்கும் இந்தநிலை வரக்கூடாது என தெரிவித்தனர்.
இதுகுறித்து கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தபொழுது , இது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். குறைந்த அளவு கழிப்பறை இருப்பது குறித்து கேள்வி எழுப்பியபோது, கூடுதல் கழிவறை கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion