மேலும் அறிய

சுசி கணேசன் குறித்து லீனா மணிமேகலை ஏன் கருத்துகளை வெளியிடுகிறார் - சென்னை உயர்நீதிமன்றம்

இயக்குனர் சுசி கணேசன் குறித்து கருத்துகளை தெரிவிக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் லீனா மணிமேகலை ஏன் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

இயக்குனர் சுசி கணேசன் குறித்து கருத்துகளை தெரிவிக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் லீனா மணிமேகலை ஏன் தொடர்ந்து பத்திரிகைகளில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தனக்கு எதிராக ட்விட்டர் சமூக ஊடகத்தில் 'மீடு' புகார் தெரிவித்தது தொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன் சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுடன் சுசிகணேசன் இணைவது போன்ற செய்திகள் சமூக வலைதளங்களில் கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சுசி கணேசன் குறித்து லீனா மணிமேகலையும், சின்மயியும்  கருத்துக்களை பதிவிட்டனர்.
 
உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தனக்கு எதிராக லீனா மணிமேகலையும், பின்னணி பாடகி சின்மயியும் பரப்பி வருவதாகவும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஃபேஸ்புக், கூகுள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களும், தனியார் இணையதள செய்தி நிறுவனமும் பரப்பி வருவதால், தன்னைப் பற்றிய அவதூறு கருத்துக்களை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டுமெனவும் இயக்குனர் சுசி கணேசன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


சுசி கணேசன் குறித்து லீனா மணிமேகலை ஏன் கருத்துகளை வெளியிடுகிறார் - சென்னை உயர்நீதிமன்றம்

மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சுசிகணேசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் லீனா மணிமேகலை தொடர்ந்து தன்னை பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சுசி கணேசன் குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஏன் தொடர்ந்து பத்திரிகைகளில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என கேள்வி எழுப்பிய நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் லீனா மணிமேகலைக்கு அறிவுறுத்த வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். மேலும் வழக்கு தொடர்பாக லீனா மணிமேகலை பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
Tata Sierra EV QWD Review: டாடா சியரா EV QWD எப்படி இருக்கு.? இது இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் SUV-யா.? இதோ ரிவ்யூவ்
டாடா சியரா EV QWD எப்படி இருக்கு.? இது இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் SUV-யா.? இதோ ரிவ்யூவ்
Scorpio N on EMI: உங்கள்ட ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மஹிந்திரா ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; மாத EMI எவ்வளவு.?
உங்கள்ட ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மஹிந்திரா ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; மாத EMI எவ்வளவு.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
Embed widget