மேலும் அறிய

எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா

A Raja DMK : தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களை விரிவாக்கம் செய்து கொண்டு இருக்கிறார் இன்றைய முதல்-அமைச்சர். இவர் முதல்-அமைச்சர் இல்லை. திட்ட விரிவாக்க அலுவலர் தான் என ஆ.ராசா விமர்சித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கடி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எ..வ.வேலு கடந்த ஆட்சியின் போது அமைக்கப்படாத சாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் 25ஆம் தேதி எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு ஆஜராக எ.வ.வேலுக்கு சம்மன் அளித்திருந்த நிலையில், சிங்கப்பூரில் சிகிச்சைக்காக சென்றுள்ளதாகவும், சென்னைக்கு திரும்பியதும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன் என தனது வழக்கறிஞர்கள் மூலம் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கடிதம் அளித்திருந்தார். 

முதலமைச்சரின் நாகரிகமற்ற பேச்சு

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கரூர் சென்ற முதலமைச்சர் விஜய், கைதுக்கு பயந்து திமுக முன்னாள் அமைச்சர்கள் ஓடி ஒளிவதாக தெரிவித்திருந்தார். இதற்கு திமுக எம்.பி. ஆ.ராசா பதில் அளித்துள்ளார்.  தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க. சட்டசபை தொகுதி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இல்லை. ஆட்சியை இழந்த பிறகு ஒரு அரசியல் கட்சிக்கு இவ்வளவு பேர் வந்து இருக்கிறார்கள் என்றால் இந்தியாவிலேயே வேறு எந்த கட்சியாலும் முடியாது. கவர்ச்சி அரசியல், பொய் பேசுதல், பாட்டு பாடுதல், அரசியல் நாகரிகமற்ற பேச்சு போன்றவை எனக்கு தெரியாது. ஒரு அநாகரிகமான மனிதன் ஆட்சி கட்டிலில் இருக்கிறார் என தெரிவித்தார்.

எ.வ.வேலு சிங்கப்பூர் போனது ஏன்.?

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிட்டார் என முதலமைச்சர் பேசுகிறார்.  சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எ.வ.வேலுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. சில உடல் பிரச்சனைகள் இருந்தது. இதற்காக கடந்த மாதம் 25 ஆம் தேதி சிங்கப்பூர் செல்வதற்காக 17ஆம் தேதியே டிக்கெட் போடப்பட்டது. ஆனால் 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு பயணம் செய்ய வேண்டிய நிலையில், அன்றைய தினம் காலையில் 6 மணிக்கு எ.வ.வேலு வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இதனால் அன்றைய தினம் சிங்கப்பூர் செல்லாமல் இரண்டு நாள் கழித்து சென்றார். லஞ்ச ஒழிப்பு துறை சோதனையின் போது முழு ஒத்துழைப்பு கொடுத்து கையெழுத்திட்ட பிறகு தான் அடுத்த 2 நாட்கள் பிறகு தான் சிங்கப்பூர் சென்றார். 

ஜாமீன் பெறும் வரை தலைமறைவாக இருக்கலாம்

எனவே யார் எங்கே இருக்கிறார்கள்.? எதற்காக போனார்கள் என்று முதல்வருக்கு தெரியாதா.? முதலமைச்சருக்கு உளவுத்துறை என ஒன்று உள்ளது தெரியாதா.? என கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் பொய் பொய்யாக பேசுகிறார். பொய்க்கு அளவே இல்லையா.?முதலமைச்சர் பொய் பேசலாமா.? காமராஜ் ராஜாஜி உட்கார்ந்த இடத்தில் பொய்யர் உட்கார்ந்துள்ளார் என கடுமையாக விமர்சித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களை விரிவாக்கம் செய்து கொண்டு இருக்கிறார் இன்றைய முதல்-அமைச்சர்.

இவர் முதல்-அமைச்சர் இல்லை. திட்ட விரிவாக்க அலுவலர் தான். செந்தில்பாலாஜி ஓடுகிறார் என்று விஜய் சொல்கிறார். ஒரு வழக்கு போடும்போது அந்த வழக்கில் ஜாமீன் பெறும் வரை தலைமறைவாக இருக்கலாம். நீங்கள்(விஜய்) போடுவது பொய் வழக்கு. பொய் வழக்கில் இருந்து தப்பித்து கொள்ள சட்டவழிமுறை இருக்கிறது என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Embed widget