மேலும் அறிய

தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!

பேக்கரி உரிமையாளரின் மனைவியுடன் ஏற்பட்ட பழக்கத்தால், அவரது மகன்கள் மற்றும் நண்பர்களால் அடித்துத் தள்ளப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. கல்லூரி மாணவர் உட்பட 5 பேர் கைது

திருமணம் மீறிய உறவு 

திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பூவரசன் என்பவர் கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் இயங்கி வரும் ராஜா என்பவருக்குச் சொந்தமான பேக்கரியில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், பேக்கரி உரிமையாளர் ராஜாவின் மனைவி சுதா அடிக்கடி பேக்கரிக்கு வந்து கணவனுக்கு உதவி செய்து வந்த நிலையில் அவருக்கு பூவரசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி, இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

நாளடைவில் இந்த விவகாரம் குறித்து அறிந்த பேக்கரி உரிமையாளர் ராஜா, பூவரசனை கண்டித்து, இனி பேக்கரியில் வேலை செய்ய வேண்டாம் என கூறி அங்கிருந்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சில மாதங்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறிய பூவரசன், வேறு பகுதியில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

மகன்களுடன் ஏற்பட்ட கைகலப்பு

பின்னர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் பொள்ளாச்சி பேக்கரிக்கு சென்று சுதாவிடம் பேச முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது பேக்கரியில் இருந்த ராஜாவின் மகன்கள் பூவரசனை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரை நண்பர்களுடன் சேர்ந்து கண்டித்திருக்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறிய நிலையில், அங்கிருந்தவர்கள் பூவரசனை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பூவரசன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயன்ற போதும் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார், பூவரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகன்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் , பேக்கரி உரிமையாளர் ராஜாவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் என பள்ளி சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயுடன் கள்ள தொடர்பில் இருந்த நபரை மகன்கள் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget