மேலும் அறிய

Kilambakkam Metro: கிளாம்பாக்கத்திற்கு வருகிறது மெட்ரோ.. சூப்பர் ஹீரோவாகும் வண்டலூர்..!

கிளாம்பாக்கத்தில் மெட்ரோ பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

சென்னை மெட்ரோ..

சென்னை பொது மக்களுக்கு சமீப காலமாக வரப் பிரசாதமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை இருந்து வருகிறது.  சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான க்ரீன் லைன் வழித்தடம், விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையிலான ப்ளூ வழித்தடம் ஆகியவையும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவற்றின் மூலம் அதிகளவு பொதுமக்கள் தினமும் பயணித்து வருகின்றனர். சென்னையில் மெட்ரோ சேவைகள் துவங்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகள் ஆகின்றன.


Kilambakkam Metro: கிளாம்பாக்கத்திற்கு வருகிறது மெட்ரோ.. சூப்பர் ஹீரோவாகும் வண்டலூர்..!

12 கோடி நபர்கள் பயணம்..

தற்போது வரை சென்னையில் மெட்ரோ ரயில் மேற்கொண்டுள்ள பயணங்களின் மொத்த எண்ணிக்கை 12 கோடி மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 - 26.34 லட்சம்
2016 - 36.37 லட்சம்
2017 - 73.99 லட்சம்
2018 - 1.48 கோடி
2019 - 3.13 கோடி
2020 - 1.18 கோடி
2021 - 2.54 கோடி
2022 - 2.44 கோடி
இந்த விபரங்களின் படி, 2019-ம் ஆண்டு அதிகபட்சமாக 3.13 கோடி பயணங்களை மெட்ரோ ரயில் மேற்கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Kilambakkam Metro: கிளாம்பாக்கத்திற்கு வருகிறது மெட்ரோ.. சூப்பர் ஹீரோவாகும் வண்டலூர்..!

அடுத்தகட்டமாக... 

அடுத்தகட்டமாக பர்பிள் லைன், ஆரஞ்சு லைன், ரெட் லைன் என பல்வேறு மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த பிறகு, இணைப்பு திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ பணிகள் மேற்கொள்வதற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அறிக்கைக்கு இதுவரை அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதால், இதற்கு ஒப்புதல் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Kilambakkam Metro: கிளாம்பாக்கத்திற்கு வருகிறது மெட்ரோ.. சூப்பர் ஹீரோவாகும் வண்டலூர்..!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்..

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த பேருந்து நிலையம் வரும் செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விரைவாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, இணைக்கும் வகையில் மெட்ரோ துவங்கப்படும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.
Kilambakkam Metro: கிளாம்பாக்கத்திற்கு வருகிறது மெட்ரோ.. சூப்பர் ஹீரோவாகும் வண்டலூர்..!

இன்னும் சில ஆண்டுகளில் மெட்ரோ பணிகள் முடிந்தவுடன் சிங்காரச் சென்னையின், பிரதான போக்குவரத்தாக மெட்ரோ இருக்கும் என்பதில் ஐயமில்லை, அதேபோல கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பிறகு, சிங்கார சென்னையின் நாயகனாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விளங்கும் என்பதே கருத்தாக உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget