கிளாம்பாக்கம் ரயில் நிலையம்: ஜனவரியில் திறப்பு! பயணிகளின் காத்திருப்பு முடிவுக்கு வருமா? முழு தகவல்!
Kilambakkam Railway Station: "கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் பணிகள் நிறைவடைந்து வருகின்ற ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது

Kilambakkam Railway Station: சென்னை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பகுதியில், சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து, பயணிகளுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்த வண்ணம் இருக்கிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - Kilambakkam Bus Stand
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொருத்தவரை பல்வேறு வசதிகள் பயணிகளைக் கவர்ந்திருக்கின்றன. குறிப்பாக தூய்மையான கழிவறை பயணிகளுக்கு மிகவும் சௌகரியத்தை கொடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சென்று அடைய வேண்டும் என்றால், தற்போதைய சூழலில் பேருந்து மட்டுமே ஒரே பொது போக்குவரத்தாக இருந்து வருகிறது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - Kilambakkam Railway Station
இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம், அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. தெற்கு ரயில்வே நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை துவங்கினால், அதிகளவு நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், சிஎம்டிஏ சார்பில் 20 கோடி ரூபாய் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதம் இருந்து வந்தது. தற்போது இரண்டு பாதைகள் அமைக்கப்பட்ட பிறகும், மூன்றாவது பாதை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதற்கு கிளாம்பாக்கம் நடை மேம்பாலம் தான் காரணம் என தகவல் வெளியாகியிருந்தது.
எப்போது முடியும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பணிகள் - Kilambakkam Railway Station Opening Date
கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தீபாவளியின் போது கிளாம்பாக்கம் ரயில் நிலைய மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் பல்வேறு சிக்கல்கள் காலமாக பணிகள் தாமதமாகி நடைபெற்று வந்தன.
இந்தநிலையில் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனால் பணிகள் விரைவில் நிறைவடைந்து, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வருகின்ற ஜனவரி மாதம் முதல் வாரத்தின் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.





















