மேலும் அறிய
Advertisement
Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே தாம்பரம் கமிஷனர் ஆபீஸ்..! இதுதான் காரணமாம்..
கிளாம்பாகத்தில் தாம்பரம் கமிஷனர் அலுவலகம் அமையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் 393.74 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய புறநகர் பேருந்து நிலையம், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்பொழுது தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு நடைபெற்று வந்தது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பணிகள் தாமதமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பணிகள் வேகம் எடுக்க துவங்கியுள்ளது. இதன் அடிப்படையில் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள், வண்டலூர் அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டு பேருந்து பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாம்பரம் மாநகராட்சி
சமீபத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை ஆட்சி அமைந்த போது, தாம்பரம் தனி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து, தாம்பரத்தில் கமிஷனர் அலுவலகமும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தாம்பரம் கமிஷனர் அலுவலகம் தற்போது சோழிங்கநல்லூரில் தற்காலிக இடத்தில் செயல்பட்டு வந்தாலும், புதிய தாம்பரம் கமிஷனர் அலுவலகம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது, இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
புதிய கமிஷனர் அலுவலகம்..
குறிப்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்த, வண்டலூர் கோட்டத்தில் அடங்கிய ஓட்டேரி, கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் ஆகிய காவல் நிலையங்களை ஒருங்கிணைத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக மையப்பகுதியை அதிகாரிகள் தேர்வு செய்வதற்காக முடிவு செய்தனர். இதில், ஏற்கனவே வேங்கடமங்கலம் மற்றும் கீரப்பாக்கம் ஊராட்சி பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் கொண்ட புறம்போக்கு நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
பேருந்து வசதிக்காக..
இந்நிலையில் பொதுமக்கள் புகார் கொடுப்பதற்கு ஏதுவாக பஸ் வசதி மற்றும் அனைத்து வசதிகளும் இல்லாததால் வேங்கடமங்கலம், கீரப்பாக்கம் இடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் ஒட்டியபடி அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக, இடம் தேர்வு செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர் ராகுல்நாத் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர். இதன் அடிப்படையில், பொதுமக்கள் வந்து செல்வதற்கு சுலபமாக இருக்கும் கிளாம்பாக்கம் சுற்றுவட்ட பகுதியில், ஏதாவது ஒரு இடத்தில் புதிய தாம்பரம் கமிஷனர் அலுவலகம் அமைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் வண்டலூர் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion