Kilambakkam Bus Stand: ஆஹா வந்துவிட்டது ஹாப்பி நியூஸ்.. இனி கிளம்பாக்கத்தில் தண்ணீர் தேங்காது.. சுட சுட அப்டேட் இதோ..!
" இதனால் போக்குவரத்து பாதிப்பு இனி ஏற்படாது எனவும் சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர் "
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus )
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம், சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, இணைக்கும் வகையில் மெட்ரோ துவங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திடீரென வந்த பிரச்சனை ( kilambakkam bus terminus water logging )
இந்தநிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திடீரென புதிய பிரச்சனை வரத் துவங்கியுள்ளது. அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாழ்வான பகுதியாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் சிறு மழைக்கு அதிகளவு மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
இந்த மழை நீரை வெளியேற்ற முறையான வடிகால், வசதி இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளம் மற்றும் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
முதலமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு
தலமைச்சர் உத்தரவைக் இணங்க தண்ணீர் தேங்காமல் இருக்க கேளம்பாக்கம் பகுதியில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. பல்வேறு கட்டங்களாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்பொழுது அந்தப் பணிகள் முடிவடைந்துள்ளது. இதன்காரணமாக முன்பு போல் ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் தேங்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
அடுத்தக்கட்ட திட்டம்தான் என்ன ?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை படிப்படியாக இரண்டிலிருந்து, மூன்று கட்டங்களாக இயக்குவதற்கான திட்டங்களை அரசு சார்பில் வகுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி, செல்வதற்கு வசதியாக அயன்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சி.வே.கே. சாலை முதல் ஊரப்பாக்கம் வரையிலும், புது சாலை அமைக்கும் பணிகள் குறித்தும், முடிச்சூர் பகுதியில் புதியதாக ஆம்னி பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவற்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தை பராமரிக்க என்ன திட்டம் ? ( kilambakkam bus terminus )
கிளாம்பாக்கம் பணிகள் நிறைவடைந்தாலும், செயல்பாட்டுக்கு வருவதற்கான முன்னெடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் பணியை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் டெண்டர் மூலமாக , தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமான நிலையம் பராமரிப்பு மாதிரியாக எடுத்துக் கொண்டு, சுகாதாரமான பேருந்து நிலையமாக கிளம்பாக்கம் செயல்பட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெண்டர் மூலமாக ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த வளாகத்தை இயக்கி பராமரிக்க, கடைகள், பார்க்கிங், நுழைவு கட்டணம், விளம்பரங்கள் போன்ற இதர வழியில் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.