மேலும் அறிய
Advertisement
Kanchipuram : பேருந்தில் சினிமா பாடல்.. நீதிபதி எடுத்துச் சொல்லியும் ஒலியை குறைக்காத நடத்துநர்.. எச்சரித்த காவல்துறை.. என்ன நடந்தது?
பேருந்தில் சினிமா பாடல் ஒலி அதிகமாக உள்ளதை குறைக்க சொன்ன நீதிபதி அறிவுரையை அவமதித்த பேருந்துக்கு , காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்து எச்சரித்தது செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேருந்தில் சினிமா பாடல் ஒலி அதிகமாக உள்ளதை குறைக்க சொன்ன நீதிபதி அறிவுரையை அவமதித்த பேருந்துக்கு , காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்து எச்சரித்தத செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருபவர் நீதிபதி செம்மல். இவர் தனது சொந்த வேலையாக திண்டிவனம் சென்று விட்டு காஞ்சிபுரத்திற்கு தனியார் பேருந்தில் இன்று காலை 10 மணிக்கு பயணம் செய்துள்ளார். பேருந்தில் பயணித்த போது பேருந்தில் சினிமா பாடல்களை அதிக ஒலி சத்தத்துடன், ஒளிபரப்பு செய்வதை கண்டு நடத்துனரிடம் அதனை குறைக்க கூறி அறிவுறுத்தியுள்ளார்.
இதை சற்றும் ஏற்றுக் கொள்ளாது, தனது பணியை நடத்துனர் செய்துகொண்டிருந்த நிலையில் மீண்டும் ஒலியினை குறைக்க கூறிய நிலையிலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் அதனை அலட்சியப்படுத்தியதை தொடர்ந்து காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறைக்கு இது குறித்த புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் , போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போக்குவரத்துக் காவலர் ஆகியோர் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே பேருந்தை நிறுத்தி புகார் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து ஓட்டுனருக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நடத்துனருக்கு போக்குவரத்து காவல்துறை தகுந்த அறிவுரை அளித்து இதுபோன்று பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என தெரிவித்தனர். இதனிடையே பயணம் செய்த நீதிபதி தனது பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு சென்று விட்டார். பொதுவாகவே பயணிகளை கவர பேருந்துகள், ஆட்டோக்கள் என இதுபோன்ற அதிக இசை ஒலியை எழுப்பி பயணம் செய்யும் பயணிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது சகஜமாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion