மேலும் அறிய

தொடர் போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள்.. நடைபெற உள்ள முக்கிய பேச்சுவார்த்தை.. நடக்கப்போவது என்ன ?

கடந்த 85 நாட்களாக நிர்வாகம் அனைத்து விதமான நடவடிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்

காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக உலகத்தில் இருக்கக்கூடிய முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலையும் அப்பகுதியில் அமைந்திருக்கின்றன. 

சாம்சங் தொழிற்சாலை

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏசி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சாம்சங் தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் சிஐடியு சங்கம் துவக்கப்பட்டது. சங்கம் அமைத்தற்கான அறிமுக கடிதம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது . இதனை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மேலும் ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை குறித்து நிர்வாகத்திற்கு மகஜர் அனுப்பப்பட்டது. இதையும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என தொழிலாளர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

தொடர் போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள்.. நடைபெற உள்ள முக்கிய பேச்சுவார்த்தை.. நடக்கப்போவது என்ன ?

ஊழியர்களின் குற்றச்சாட்டுகள் என்ன ?

தொழிற்சங்கத்தை ஏற்க மறுப்பது மட்டுமல்ல தொழிற்சங்கத்தை உடைப்பதற்கு சங்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து, கடந்த 85 நாட்களாக நிர்வாகம் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

தொடர் போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள்.. நடைபெற உள்ள முக்கிய பேச்சுவார்த்தை.. நடக்கப்போவது என்ன ?

இந்நிலையில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டமும் நிர்வாகிகள் கூட்டம் எடுத்த முடிவின் அடிப்படையில் , சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர் . இதன் அடிப்படையில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஊழியர்களின் கோரிக்கை என்ன ?

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்க நிர்வாகிகள், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியூ சங்கத்தை அங்கீகரித்திட வேண்டும். சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க சிஐடியூ உறுப்பினர்களை நிறுவனம் உருவாக்கும் போட்டி தொழிலாளர் கமிட்டியில், இணையுமாறு ஆலைக்குள் பணி செய்யும் தொழிலாளர்களை அச்சுறுத்துவது கட்டாயப்படுத்துவது 

மிரட்டுவது போன்ற வன்முறை நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.போட்டி அமைப்பை உருவாக்குவதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும்.

தொடர் போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள்.. நடைபெற உள்ள முக்கிய பேச்சுவார்த்தை.. நடக்கப்போவது என்ன ?

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் அமைத்துள்ள சிஐடியூ தொழிற்சங்கத்தை பதிவு செய்யவிடாமல், தொழிற்சங்க பதிவாளர் அலுவலகத்தை நிர்பந்திப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிஐடியு சார்பில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார், மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை தோல்வி. 

இந்நிலையில் இந்தப் போராட்டம் தொடர்பாக, தொழிற்சாலை நிர்வாகம், தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நான்காவது நாளாக என்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. 

மீண்டும் பேச்சுவார்த்தை

தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி சென்னை தலைமைச் செயலகத்தில், 3 மணியளவில் தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் தலைமையில் தொழிற்சாலை நிர்வாகம், தொழிற்சங்க ஊழியர்கள் குழு உடனான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun son letter: ‘’அப்பா நீங்கதான் NO.1’’ மகன் எழுதிய CUTE LETTER! எமோஷனலான அல்லு அர்ஜுன்TANGEDCO Adani Tender: 19000 கோடி TANGEDCO டெண்டர்! தட்டி தூக்கிய அதானி! சிக்கலில் செந்தில்பாலாஜி?Drinking water mixed with sewage | குடிநீரில் கலந்த கழிவுநீர்? குடித்த நேரத்தில் பலியான 3 உயிர்..உச்சக்கட்ட பரபரப்பில் தாம்பரம்Idumbavanam Karthik: ’’அரசியலுக்கு வாங்க..நேருக்கு நேர் மோதுவோம்!’’ இடும்பாவணம் கார்த்திக் சவால்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Embed widget