மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் : கல் குவாரியில் மண்சரிவு : 2 வடமாநில ஊழியர்களின் உடல்களை தேடும் பணி தீவிரம்!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கல்குவாரி மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 2 வடமாநில ஊழியர்களின் உடலை தீயணைப்புத் துறை உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு இயங்கி வரும் கல்குவாரிகள் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகள் மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் சுற்றியுள்ள மாவட்டங்களில் செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த கல் குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தற்பொழுது ஆற்று மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் எம்.சாண்ட் விற்பனை அதிகரித்து உள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள கல் குவாரிகள் வியாபாரம் ஜோராக நடைபெற்று வருகிறது.
கல்குவாரியிலிருந்து தினசரி நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் செல்வதால் கல்குவாரி வாகனங்களால் கிராம சாலைகள் பழுதாவதுடன் அவ்வப்போது விபத்துகள் நிகழ்வதும் வாடிக்கையாக ஒன்றாகிவிட்டது.இதனால் கல்குவாரியை சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகள் பழுதடைவதுடன் குடியிருப்புகளில் பொது மக்கள் அச்சத்துடனேயே வசிக்கும் சூழல் நிலவியுள்ளது. கல்குவாரிகளில் வெளியேரும் தூசிகளினால் காற்று மாசடைவதுடன் பொது மக்களுக்கு சுவாசக் கோளாறு என பல்வேறு வகையில் பாதிப்படைக்கின்றனர். இவ்வாறு கல்குவாரியால் கிராம மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறுதாமூர் கிராமத்தில் இயங்கி வரும்தனியார் கல்குவாரியில் கற்கள் பெயற்தெடுக்கும் பணிக்காக சுமார் 80 அடி ஆழ பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று மாலை இருவரும் பள்ளத்தின் அருகே நின்று கொண்டிருந்த இயந்திரம் அருகே சென்று பராமரிப்பு பணி மேற்கொள்ள சென்றபோது திடிரென மண்சரிந்து சுமார் 30 அடியில் மண்புதையில் சிக்கினர். இதை கண்ட மற்றொரு ஊழியர் தமிழ்வாணன் கூச்சலிட்டு அலுவலகத்தில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சாலவாக்கம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர் பேரில் ஆய்வாளர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கும் , வருவாய் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
விபத்து பகுதியில் போதிய வெளிச்சமின்மை மற்றும் தொடர் மழை காரணமாக மீட்புப்பணிகளை தாமதமானது. இன்று காலை மழை நின்ற பிறகு மூன்று எந்திரங்கள் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தற்போது துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது மேலே மூடியிருக்கும் மண்ணை மெதுவாக அகற்றி விடுகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக கிராமமே பதற்றமாக காணப்படுகிறது. இதேப்போல் மதூர் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட்டது, குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion