மேலும் அறிய

சென்னையில் பள்ளி மாணவன் வகுப்பறையில் மரணம்: செல்போன் காரணமா? - அதிர்ச்சியில் பெற்றோர்!

"சென்னை குன்றத்தூரில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது"

குன்றத்தூரில் அரசு பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திடீரென மயங்கி விழுந்த மாணவர்

சென்னை அடுத்த குன்றத்தூர், மணிகண்டன் நகர், நடைபாதை தெருவை சேர்ந்தவர் சரவணன். சரவணன் மகன் வெங்கடேசன் (16), குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார். மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மாணவன் வெங்கடேசனை ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்து போனார். 

செல்போன் காரணமா என விசாரணை ?

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து போன வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பள்ளி விடுமுறை நாட்களில் அதிக அளவில் வெங்கடேசன் செல்போனை பயன்படுத்தி வந்ததாகவும், பள்ளிக்கு செல்லும் நாளில் தலை வலிப்பதாக கூறிவிட்டு சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்தனர். 

இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவன் இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தினால் என்ன ஆகும் ?

தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் உடல்நல மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். செல்போன் பயன்படுத்துவதால் மனச்சோர்வு, பதற்றம், செல்போனுக்கு அடிமை ஆகுதல் உள்ளிட்ட மனநல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் உடலளவில் கண் சோர்வு, தூக்கமின்மை உள்ளிட பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்தால் கழுத்து வலி உள்ளிட்டவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் சொல்கின்றனர். எனவே செல்போனை பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அளவோடு பயன்படுத்த வேண்டும் என்பதை மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Zohran Mamdani: ட்ரம்பை மதிக்காத நியூயார்க் மக்கள் - இந்திய வம்சாவளியை மேயராக்கி சம்பவம் - யார் இந்த ஜோரன் மம்தானி?
Zohran Mamdani: ட்ரம்பை மதிக்காத நியூயார்க் மக்கள் - இந்திய வம்சாவளியை மேயராக்கி சம்பவம் - யார் இந்த ஜோரன் மம்தானி?
ADMK: என்னையை எதிர்த்தால் செங்கோட்டையன் கதி தான்.! மாவட்ட செயலாளர்களை அலற விடப்போகும் எடப்பாடி பழனிசாமி
என்னையை எதிர்த்தால் செங்கோட்டையன் கதி தான்.! மாவட்ட செயலாளர்களை அலற விடப்போகும் எடப்பாடி பழனிசாமி
TN Roundup: விஜய், எடப்பாடி ஆலோசனை, குறைந்த தங்கம் விலை, சென்னையில் புது ரூல் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜய், எடப்பாடி ஆலோசனை, குறைந்த தங்கம் விலை, சென்னையில் புது ரூல் - தமிழகத்தில் இதுவரை
TVK Vijay: புயலாகுமா? புஸ்ஸாகுமா? தவெக சிறப்பு பொதுக்குழு - விஜய் கையிலெடுத்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன?
TVK Vijay: புயலாகுமா? புஸ்ஸாகுமா? தவெக சிறப்பு பொதுக்குழு - விஜய் கையிலெடுத்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’குழந்தைக்கு அப்பா நான் தான்! ஒத்துக்கொண்ட மாதம்பட்டி’’ ஜாய் க்ரிஷில்டா வழக்கில் ட்விஸ்ட்
பொன்முடிக்கு பதவி! இறங்கி வந்த கனிமொழி! ஸ்டாலின் போட்ட கண்டிஷன்
Costume designer பண மோசடி! EVP உரிமையாளர் பகீர் புகார்! பின்னணி என்ன?
ஓபிஎஸ் கூடாரம் காலி..திமுகவில் மனோஜ் பாண்டியன்!குஷியில் தென்மாவட்ட திமுக!
”பெண்களுக்கு 30000”தேஜஸ்வி அதிரடி வியூகம்!கலக்கத்தில் நிதிஷ்குமார் | Bihar Election Tejashwi Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Zohran Mamdani: ட்ரம்பை மதிக்காத நியூயார்க் மக்கள் - இந்திய வம்சாவளியை மேயராக்கி சம்பவம் - யார் இந்த ஜோரன் மம்தானி?
Zohran Mamdani: ட்ரம்பை மதிக்காத நியூயார்க் மக்கள் - இந்திய வம்சாவளியை மேயராக்கி சம்பவம் - யார் இந்த ஜோரன் மம்தானி?
ADMK: என்னையை எதிர்த்தால் செங்கோட்டையன் கதி தான்.! மாவட்ட செயலாளர்களை அலற விடப்போகும் எடப்பாடி பழனிசாமி
என்னையை எதிர்த்தால் செங்கோட்டையன் கதி தான்.! மாவட்ட செயலாளர்களை அலற விடப்போகும் எடப்பாடி பழனிசாமி
TN Roundup: விஜய், எடப்பாடி ஆலோசனை, குறைந்த தங்கம் விலை, சென்னையில் புது ரூல் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜய், எடப்பாடி ஆலோசனை, குறைந்த தங்கம் விலை, சென்னையில் புது ரூல் - தமிழகத்தில் இதுவரை
TVK Vijay: புயலாகுமா? புஸ்ஸாகுமா? தவெக சிறப்பு பொதுக்குழு - விஜய் கையிலெடுத்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன?
TVK Vijay: புயலாகுமா? புஸ்ஸாகுமா? தவெக சிறப்பு பொதுக்குழு - விஜய் கையிலெடுத்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன?
Plane Crash: திடீரென கீழே விழுந்து சறுக்கி நொறுங்கிய விமானம்..  தீப்பிழம்பு, கரும்புகை, 3 பேர் பலி - வீடியோ வைரல்
Plane Crash: திடீரென கீழே விழுந்து சறுக்கி நொறுங்கிய விமானம்.. தீப்பிழம்பு, கரும்புகை, 3 பேர் பலி - வீடியோ வைரல்
கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
Hyundai Venue Price: நெக்ஸான், ப்ரேஸ்ஸாவை அலறவிடும் வென்யு - விலையில் வெடியை வைத்த ஹுண்டாய், முழு லிஸ்ட்
Hyundai Venue Price: நெக்ஸான், ப்ரேஸ்ஸாவை அலறவிடும் வென்யு - விலையில் வெடியை வைத்த ஹுண்டாய், முழு லிஸ்ட்
கர்ப்பமான காதலி கோடாரியால் வெட்டி கொடூர கொலை.. போலீஸ் வரும்வரை காத்திருந்த இளைஞர்!
கர்ப்பமான காதலி கோடாரியால் வெட்டி கொடூர கொலை.. போலீஸ் வரும்வரை காத்திருந்த இளைஞர்!
Embed widget