மேலும் அறிய

காஞ்சிபுரம் : போலி பட்டாவுக்கு ரூ. 200 கோடி இழப்பீடு? : முறைகேடு விவகாரத்தில் இருவர் கைது..!

ஶ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கத்திற்காக போலியாக ஆவணம் தயாரித்து அரசு நிலத்தை நெடுஞ்சாலை திட்டத்தில் நில எடுப்பு தொகை 126 கோடி ரூபாய் அரசுக்கே விற்ற வழக்கில் 30 கோடி பெற்ற ஆசிஸ் மேத்ரா மற்றும் 3 கோடி பெற்ற செல்வம் இருவரை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியும் நடந்து வந்தது. இதற்கு இழப்பீட்டு தொகை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. இதற்கென மாவட்டத்தில் சிறப்பு வருவாய் அலுவலர் தலைமையில் அலுவலகம் இயங்கி வருகிறது.

காஞ்சிபுரம் : போலி பட்டாவுக்கு ரூ. 200 கோடி இழப்பீடு? : முறைகேடு விவகாரத்தில் இருவர் கைது..!
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பீமன்தாங்கல் என்னும் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அரசு நிலத்திற்கு போலி பட்டா தயாரித்து சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்கள் இழப்பீட்டு தொகையாக சுமார் ₹200 கோடியை முறைகேடாக பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

காஞ்சிபுரம் : போலி பட்டாவுக்கு ரூ. 200 கோடி இழப்பீடு? : முறைகேடு விவகாரத்தில் இருவர் கைது..!
ஆனால், முறையாக ஆவணங்களை சரி பார்க்காமல் போலி பட்டா வைத்திருந்த சுமார் 70 நபர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் ₹200 கோடி இழப்பீட்டு தொகை வழங்கியது தமிழக நில நிர்வாக ஆணையத்திற்கு கடந்தாண்டு தெரியவந்தது. இது தொடர்பாக தற்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்தார். 

காஞ்சிபுரம் : போலி பட்டாவுக்கு ரூ. 200 கோடி இழப்பீடு? : முறைகேடு விவகாரத்தில் இருவர் கைது..!
அதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால், அரசு நிலத்தை போலி பட்டா மாற்றம் செய்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா உள்ளிட்ட அப்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன், நிலவரி திட்ட உதவி அலுவலர் சண்முகம், ஆசிஸ் மேத்தா, செல்வம் உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த மார்ச் மாதம், பீமன்தாங்கல் கிராமத்தில் பட்டா பெற்றிருந்த 37 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்து, நில நிர்வாக ஆணையம் உத்தரவிட்டது.  காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம், அந்த கிராமத்தில் விசாரணை நடத்தியதில், மேலும், 46 ஏக்கர் முறைகேடாக பட்டா பெற்றிருப்பது தெரியவந்தது. 

காஞ்சிபுரம் : போலி பட்டாவுக்கு ரூ. 200 கோடி இழப்பீடு? : முறைகேடு விவகாரத்தில் இருவர் கைது..!
பல ஆண்டுகளுக்கு முன்பாக, அனாதீனம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களாக அவை இருந்துள்ளன. இதனால், அந்த 46 ஏக்கர் நிலங்களுக்கான பட்டாவையும் சில நாட்களுக்கு முன் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுக்கப்பட்ட கிராமங்களில், போலி பட்டா குறித்து விசாரிக்க, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி தாமல் வரை 33 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
 
காஞ்சிபுரம் : போலி பட்டாவுக்கு ரூ. 200 கோடி இழப்பீடு? : முறைகேடு விவகாரத்தில் இருவர் கைது..!
 இதில், வேறு யாராவது போலி பட்டா வைத்து இழப்பீடு தொகை பெற்றனரா என ஆராய, 6 வருவாய் துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஆய்வு நடத்தி, அதற்கான அறிக்கையை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திடம் அளிக்க உள்ளனர். அந்த அறிக்கையில், போலி பட்டா மூலம் யாருக்காவது, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு இழப்பீடு பெற்றது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று 83 நபர்களில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அதில் 126 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 30 கோடி பெற்ற ஆசிஸ் மேத்ரா மற்றும் 3 கோடி பெற்ற செல்வம் இருவரை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த விவகாரத்தில் இன்னும் சிலர் மாடுவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. போலி பட்டா பெறுவதற்கு அரசுத் துறையில் இருந்து யாராவது உதவினார்களா என்பது குறித்த விசாரணையை முடுக்கி விடப்பட்டுள்ளது

தலைப்பு செய்திகள்

TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Chennai Traffic: வடசென்னை நெரிசல் குறையுமா? அதிரடியான 5 திட்டங்கள் - அடையாறு தொடங்கி வியாசர்பாடி வரை
வடசென்னை நெரிசல் குறையுமா? அதிரடியான 5 திட்டங்கள் - அடையாறு தொடங்கி வியாசர்பாடி வரை
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Embed widget