Kanchipuram :காஞ்சிபுரத்தில் முகக்கவசம் கட்டாயம், திருமணத்திற்கு 100 பேர் மட்டுமே அனுமதி - ஆட்சியர் உத்தரவு
காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதிகரிக்கும் கொரோனா தொற்று:
தமிழ்நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 686 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 35 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
#TamilNadu | #COVID19 | 20 June 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 20, 2022
• TN - 686
• Total Cases - 34,61,560
• Today's Discharged - 257
• Today's Deaths - 0
• Today's Tests - 17,208
• Chennai - 294#TNCoronaUpdates #COVID19India
TNCorona District Wise Data 20 Jun 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 20, 2022
Ariyalur 0
Chengalpattu 129
Chennai 294
Coimbatore 24
Cuddalore 3
Dharmapuri 2
Dindigul 1
Erode 5
Kallakurichi 0
Kancheepuram 35
Kanyakumari 47
Karur 2
Krishnagiri 1
Madurai 13
Mayiladuthurai 0
Nagapattinam 1
Namakkal 3
Nilgiris 6
கொரோனா கட்டுப்பாடுகள்:
காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இறப்பு நிகழ்வுகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன வசதி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்