மேலும் அறிய
நெகிழ வைத்த ஆட்டோ ஓட்டுநரின் செயல்.. நேரில் சென்று பாராட்டிய காஞ்சிபுரம் எம்எல்ஏ..! நடந்தது என்ன ?
"ஆட்டோ ஓட்டுனர் பூபாலன் செய்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது என காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் பாராட்டினார்"

எழிலரசன் எம்.எல்.ஏ
ராஜஸ்தான் சுற்றுலா பயணிகள் தவறவிட்ட 50000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் -நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து பாராட்டி ஊக்கப்படுத்திய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளில் ஒரு குழுவினர் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் இருந்து ஆட்டோ ஓட்டுனர் பூபாலன் என்பவரின் ஆட்டோ மூலம் காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று இறங்கிவிட்டு மதியம் சுமார் 12 மணியளவில் ஆட்டோவை அனுப்பி விட்டனர்.

வழக்கம்போல் மதிய உணவிற்கு செவிலி வீட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கும்போது பின் இருக்கையில் பை ஒன்று இருப்பதை கண்டுள்ளார். பின்னர் பையை திறந்து பார்த்தபோது அதிலிருந்து புகைப்படத்தை பார்த்து இவன் நம் ஆட்டோவில் வந்த பயணியுடையது என.உறுதி செய்தார்.உடனடியாக வீட்டில் இருந்து புறப்பட்டு ராஜஸ்தான் பயணிகள் தங்கியிருந்த யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதிக்குச் சென்று தன் ஆட்டோவில் பயணித்த ராஜஸ்தான் பயணியை தேடி கண்டுபிடித்து அவர் தவறவிட்ட 50000 ரொக்க பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை திருப்பி கொடுத்தார்.

இதனைக் கண்ட ராஜஸ்தான் பயணி மிகுந்த நிகழ்ச்சியோடு ஆட்டோ ஓட்டுனர் பூபாலனை கட்டி அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தி பாராட்டினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஆட்டோ ஓட்டுநர் பூபாலனுக்கு பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் , காஞ்சிபுரம் வருகை தந்த ராஜஸ்தான் பயணி தவறவிட்ட ரொக்கப் பணம் ரூபாய் 50 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்களை நேர்மையாக உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் பூபாலனை கழக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் நேரில் சென்று சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். பின்னர், எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி ஆட்டோ ஓட்டுனர் பூபாலன் செய்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது என காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் பாராட்டினார். இந்நிகழ்வில் பகுதி செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
கிரிக்கெட்
உலகம்





















