மேலும் அறிய

School Leave : தொடரும் மழை.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு நிலவரம்: எந்த பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(12.12.2022) பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார.

மான்டஸ் புயல் எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தைக் காட்டிலும் காஞ்சிபுரம் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது, குறிப்பாக காஞ்சிபுரம் பகுதியில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 20 சென்டிமீட்டர் அதிகமான மழை பெய்ததால், காஞ்சிபுரம் நகர் பகுதி வெள்ளக்கார காட்சியளிக்கிறது. காஞ்சிபுரம் நகரில் மையப் பகுதியில் செல்லும் வேகவதி ஆற்றில், சில ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிக அளவு மழை பெய்து , நகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால்,  இன்று 12.12.2022 மழை காரணமாக காஞ்சிபுரம் தாலுக்கா உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில்  இன்று (12.12.2022)  பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர்  தெரிவித்துள்ளார்.

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் மழை..? வானிலை மையம் கொடுத்த அப்டேட் இதுதான்..!

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் மிதமான மழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் நாளை மறுநாள் (வரும் 13ஆம் தேதி) வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின்  காரணமாக மழைப்பொழிவு இருக்கும் எனவும், இது புயலாக மாறுமா? இல்லையா? என்பது வரும் காலங்களில் தான் தெரியும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்துள்ளதால், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதன் காரணமாக, இன்று 11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் 12.12.2022 மற்றும் 13.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில  இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget